பராமரிக்க ஆளின்றி தவிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானை
பராமரிக்க ஆளின்றி தவிக்கும் ஸ்ரீவில்லிப்புத்தூர் கோவில் யானை
மேட்டுப்பாளையம்
கோவை மேட்டுப்பாளையத்தை அடுத்த தேக்கம்பட்டி பவானி ஆற்றுப் படுகையில் யானைகள் சிறப்பு நலவாழ்வு முகாம் நடைபெற்றது வருகிறது. முகாமில் கடந்த சில நாட்களுக்கு முன்பு ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோவில் யானை ஜெயமால்யதாவை தாக்கியதாக பாகன்கள் ராஜா என்ற வினில்குமார், சிவபிரசாத் ஆகியோர் கைது செய்யப்பட்டனர்.
இதையடுத்து ஜெயமால்யதாவை பராமரிக்க திருச்செந்தூர் தெய்வானை யானை பாகன்களுடன் வந்த சுப்பிரமணியம் என்பவர் நியமிக்கப்பட்டார்.ஆனால் ஜெயமால்யதா யானை அவருடன் இணைந்து போகவில்லை.
இந்த நிலையில் கடந்த ஒரு வாரமாக ஜெயமால்யதா யானை நடைபயிற்சி மற்றும் குளியலுக்கு அழைத்து செல்லாமல் ஒரே இடத்தில் கட்டி வைக்கப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் பாகன்கள் பெரும் முயற்சி செய்து அதே இடத்தில் யானையை குளிக்க வைத்தனர். ஆனால் பாகன்களின் கட்டளைகளை யானை ஏற்றுக்கொள்ளாமல் இருந்தது. இது முகாமிலுள்ள மற்ற பாகன்கள் மத்தியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
இந்த பிரச்சனைக்கு எப்படி தீர்வு காண்பது என்று எங்களுக்கு ஒன்றும் புரியவில்லை என்று பாகன்கள் மனவருத்தத்துடன் கூறினர். இதனால் பாகன்கள் இல்லாததால் பாராமரிக்க ஆளின்றி ஜெயமால்யதா யானை சோகத்துடன் தவித்து வருகிறது. இந்த சம்பவம் மற்ற பாகன்கள் மத்தியிலும் சோகத்தை ஏற்படுத்தி வருகிறது.
Related Tags :
Next Story