கயத்தாறு மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம்
கயத்தாறு மாரியம்மன் கோவிலில் முளைப்பாரி ஊர்வலம் நடந்தது.
கயத்தாறு:
தூத்துக்குடி மாவட்டம் கயத்தாறு தெற்கு தெரு மாரியம்மன் கோவில் திருவிழா நடந்தது. விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சிறப்பு பூஜைகள், அன்னதானம் நடைபெற்றது. இரவில் வில்லிசை உடன் பூஜை நடந்தது.
விழாவில் காலை 10 மணிக்கு முளைப்பாரி ஊர்வலம், அக்னி சட்டி, பால்குடம் உள்ளிட்டவைகளை பக்தர்கள் சுமந்து கொண்டு ஊர்வலமாக சென்றனர். தொடர்ந்து காந்தாரி அம்மன் கோவில், செல்வ விநாயகர் கோவில் உள்ளிட்ட அனைத்து கோவில்களிலும் பூஜைகள் நடத்தப்பட்டது.
முக்கிய வீதிகள் வழியாக வலம் வந்த ஊர்வலம் கோவிலில் நிறைவடைந்தது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். ஏற்பாடுகளை விழா கமிட்டியினர் செய்து இருந்தனர்.
Related Tags :
Next Story