ஸ்ரீவைகுண்டம் குருநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்


ஸ்ரீவைகுண்டம் குருநாத சுவாமி கோவிலில்  மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றம்
x
தினத்தந்தி 2 March 2021 4:08 PM IST (Updated: 2 March 2021 4:08 PM IST)
t-max-icont-min-icon

ஸ்ரீவைகுண்டம் குருநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

ஸ்ரீவைகுண்டம்:
ஸ்ரீவைகுண்டம் குருநாத சுவாமி கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

மகா சிவராத்திரி 

தூத்துக்குடி மாவட்டம் ஸ்ரீவைகுண்டத்தில் மாதாங்கோவில் என்று அழைக்கப்படும் குருநாத சுவாமி, அங்காள பரமேஸ்வரி அம்மன் கோவிலில் மகா சிவராத்திரி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

தொடர்ந்து 10 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் சிறப்பு பூஜைகள், அபிஷேகம், அலங்கார தீபாராதனை நடைபெறுகிறது.

முக காப்பு திருவிழா

9-ம் நாளான வருகிற 10-ந் தேதி (புதன்கிழமை) முக காப்பு திருவிழா நடக்கிறது. அன்று இரவில் சிறப்பு பூஜைகள் நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து, அம்மன் முகம் தேரில் வீதி உலா வருகிறது. பின்னர் அம்மன் முகம் தாமிரபரணி ஆற்றில் கரைக்கப்படும்.

11-ந் தேதி மகா சிவராத்திரி அன்று காலையில் சிறப்பு பூஜை, மதியம் உச்சிகால பூஜை, மாலையில் திருவிளக்கு பூஜை நடைபெறுகிறது. இதனை தொடர்ந்து இரவில் அம்மன் முன்பு அழகு நிறுத்துதல் நடைபெறும்.
----------


Next Story