தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்


தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம்
x
தினத்தந்தி 2 March 2021 4:12 PM IST (Updated: 2 March 2021 4:12 PM IST)
t-max-icont-min-icon

தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

திருச்செந்தூர்:
தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து கட்சி கூட்டம் நடந்தது.

அனைத்து கட்சி கூட்டம்

தமிழகம் முழுவதும் ஒரே கட்டமாக வருகிற ஏப்ரல் மாதம் 6-ந் தேதி சட்டமன்ற தேர்தல் நடக்கிறது. தேர்தல் நடத்தை விதிமுறைகள் தற்போது அமலுக்கு வந்துள்ளது.

இதையடுத்து தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து திருச்செந்தூர் உதவி கலெக்டர் அலுவலகத்தில் அனைத்து அரசியல் கட்சியினருடனான ஆலோசனை கூட்டம் நடந்தது.
 
உதவி கலெக்டர் தனப்பிரியா தலைமை தாங்கி, அரசியல் கட்சியினர் பின்பற்ற வேண்டிய தேர்தல் விதிமுறைகள் குறித்து கட்சியினருக்கு எடுத்து கூறினார். 

உதவி போலீஸ் சூப்பிரண்டு

திருச்செந்தூர் உதவி போலீஸ் சூப்பிரண்டு ஹரீஷ் சிங், தாசில்தார்கள் முருகேசன், இசக்கிராஜ் ஆகியோர் முன்னிலை வகித்தனர். கூட்டத்தில், துணை தாசில்தார்கள் பாலசுந்தரம், சுந்தரராகவன், தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் ஞானசேகரன், அ.தி.மு.க. ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், நகர செயலாளர் மகேந்திரன், தி.மு.க. மாவட்ட வக்கீல் அணி அமைப்பாளர் ஜெபராஜ், நகர பொறுப்பாளர் சுடலை,

பா.ஜ.க. மக்கள் தொடர்பு பிரிவு தலைவர் பாலசுப்பிரமணியன், காங்கிரஸ் விவசாய அணி மாவட்ட தலைவர் வேல் ராமகிருஷ்ணன், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு ஒன்றிய செயலாளர் முத்துக்குமார், பா.ம.க. மாவட்ட தலைவர் சிவபெருமாள், ஒன்றிய செயலாளர் பிரபாகரன் உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story