வாக்குச்சாவடி மையங்களில் அதிகரிகள் ஆய்வு
வாக்குச்சாவடி மையங்களில் அதிகரிகள் ஆய்வு செய்தனர்
சோழவந்தான்,
சட்டமன்ற தேர்தலை முன்னிட்டு சோழவந்தானில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாடிப்பட்டி தாசில்தார் பழனிகுமார், தலைமை நில அளவையர் செந்தில், தேர்தல் துணை வட்டாட்சியர் இசக்கிமுத்து, வருவாய் ஆய்வாளர் அழகுகுமார் ஆகியோர் ஆய்வு செய்தனர். இதில் கிராம நிர்வாக அலுவலர்கள் ஜெயப்பிரகாஷ், முத்துக்குமரன், மணிவேல், சூசைஞானசேகரன், முபாரக் சுல்தான், வெங்கடேசன், கார்த்திக், பழனி, செல்வமணி, சுரேஷ், கார்த்தீஸ்வரி, முத்துராமலிங்கம், முத்துப்பாண்டி ராஜா ஆகியோர் அந்தந்த கிராமங்களில் உள்ள வாக்குச்சாவடி மையங்களில் வாக்காளர்களுக்கு செய்யப்பட வேண்டிய வசதிகள் குறித்து விளக்கம் அளித்தனர். சோலைகுறிச்சி, பேட்டை, தென்கரை, முள்ளிப்பள்ளம், மன்னாடிமங்கலம், குருவித்துறை, மேலக்கால், திருவேடகம், நெடுங்குளம், திருவாலவாயநல்லூர், சித்தாலங்குடி, நகரி, சி.புதூர், இரும்பாடி, கருப்பட்டி, நாச்சிகுளம் ஆகிய பகுதிகளில் உள்ள வாக்குச்சாவடி மையங்களிலும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.
Related Tags :
Next Story