பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை


பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகத்தில் தூய்மை பணியாளர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 2 March 2021 7:30 PM IST (Updated: 2 March 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

சென்னையை அடுத்த பரங்கிமலை கண்டோன்மெண்ட் போர்டு அலுவலத்தில் 200-க்கும் மேற்பட்ட களப்பணியாளர்கள் பணியாற்றி வருகிறார்கள். இந்த நிலையில் புதிதாக துப்புரவு பணிக்காக 80 பேர் பணி அமர்த்தப்பட்டு உள்ளனர்.

இதற்கு எதிர்ப்பு தெரிவித்து ஏற்கனவே பணியாற்றி வரும் தூய்மை பணியாளர்கள் நேற்று திடீரென கண்டோன்மெண்ட் போர்டு அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள் புதிதாக நியமிக்கப்பட்ட ஊழியர்களை திரும்பப்பெற வேண்டும். எங்கள் பணிக்கு உத்தரவாதம் தரவேண்டும் என கோஷமிட்டனர்.

இது குறித்த தகவல் அறிந்ததும் பரங்கிமலை போலீசார் விரைந்து வந்து முற்றுகை போராட்டம் நடத்தியவர்களை சமாதானம் செய்து அனுப்பி வைத்தனர்.

Next Story