‘பிரயாஸ்' திட்டத்தின் கீழ் 2 நிறுவன ஊழியர்களுக்கு ஓய்வு பெற்ற நாளிலேயே ஓய்வூதியம்
மத்திய அரசு ‘பிரயாஸ்' என்ற திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டத்தின் கீழ், தொழிலாளர் வருங்கால வைப்பு நிதி (இ.பி.எப்.ஓ.) திட்டம் 1995-ல் உறுப்பினர்களாக உள்ள ஊழியர்கள் ஓய்வு பெறும் நாளிலேயே அவர்களுக்கு ஓய்வூதியம் வழங்கப்படுகிறது.
இந்தியன் ஆயில் நிறுவனம், அசோக் லேலண்ட் நிறுவனங்களில் பணி ஓய்வு பெற்ற ஊழியர்களுக்கு, அன்றைய தினமே ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணை வழங்கப்பட்டது. சென்னை வடக்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-2 (ஓய்வூதியம்) சுதிர் குமார் ஜெய்ஸ்வால், ஓய்வூதியம் பெறுவதற்கான ஆணையை ஓய்வுபெற்ற ஊழியர்களுக்கு வழங்கினார். இந்த நிகழ்ச்சியில், சென்னை தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி உதவி கமிஷனர் பி.ஸ்ரீனிவாசன் உள்பட அதிகாரிகள் பங்கேற்றனர்.
மேற்கண்ட தகவல் சென்னை வடக்கு மற்றும் தெற்கு மண்டல வருங்கால வைப்பு நிதி கமிஷனர்-1 ரிதுராஜ் மேதி வெளியிட்ட செய்திக்குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Related Tags :
Next Story