மதுபான கடத்தலை தடுக்க பறக்கும் படை குழுக்கள்


மதுபான கடத்தலை தடுக்க பறக்கும் படை குழுக்கள்
x
தினத்தந்தி 2 March 2021 8:12 PM IST (Updated: 2 March 2021 8:12 PM IST)
t-max-icont-min-icon

விழுப்புரம் மாவட்டத்தில் மதுபான கடத்தலை தடுக்க பறக்கும் படை குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளது.

விழுப்புரம், 

விழுப்புரம் மாவட்டத்தில் சட்டமன்ற தேர்தல் நடத்தை விதிமுறைகள் நடைமுறையில் உள்ளதால் கள்ளத்தனமாக மதுபாட்டில்கள் கடத்தப்படுவதை தடுக்கவும், மதுபான கடைகளின் தினசரி விற்பனையை கண்காணிக்கவும் சிறப்பு பறக்கும் படை குழுக்கள் அமைக்க உத்தரவிடப்பட்டுள்ளது. அதன்படி தினமும் மதுபான கடையில் விற்பனையாகும் மதுபானங்களின் அளவினை கண்காணித்திடவும், மதுபானங்கள் கடத்தலில் ஈடுபடுபவர்களை கைது செய்து நடவடிக்கை எடுக்கவும் போலீசாருக்கு கலெக்டரால் அறிவுறுத்தப்பட்டுள்ளது. 
அதுமட்டுமின்றி மதுபான கடைகளில் தினசரி விற்பனையை கண்காணிக்கவும், மதுபானம் தொடர்பான புகார்கள் மீது நடவடிக்கை எடுக்கவும் மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் இயங்கும் கட்டுப்பாட்டு அறையில் பணிபுரிந்திட வழிகாட்டு அலுவலரான விழுப்புரம் டாஸ்மாக் உதவி மேலாளர் (சில்லரை விற்பனை) ரங்கநாதன் என்பவர் தமிழ்நாடு மாநில வாணிபக்கழக மேலாண்மை இயக்குனரால் நியமிக்கப்பட்டுள்ளார். இவரின் செல்போன் எண் 97905 31671.

பறக்கும் படை குழு

மேலும் மாவட்டம் முழுவதும் மதுபான விற்பனை மற்றும் கடத்தலை தடுக்க மாவட்ட மேலாளர் முருகன் (செல்போன் எண்- 90804 40168), உதவி மேலாளர் (கணக்கு) பாக்யராஜ் (98843 12331) ஆகியோர் தலைமையில் பறக்கும் படை அலுவலர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் மாவட்டம் முழுவதும் ரோந்துப்பணி மேற்கொண்டு கள்ளத்தனமாக மதுபான விற்பனை மற்றும் கடத்தலை கண்காணித்து தடுக்க நடவடிக்கை எடுப்பார்கள். எனவே பொதுமக்கள் தங்கள் பகுதியில் மதுபான கடத்தல், விற்பனையில் ஈடுபடுபவர்கள் பற்றி ஏதேனும் தகவல் கிடைத்தால் உடனடியாக மேற்கண்ட செல்போன் எண்களை தொடர்பு கொண்டு புகார் தெரிவிக்கலாம்.
இந்த தகவல் கலெக்டர் அலுவலகம் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளது.

Next Story