கி.பி.16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு


கி.பி.16-ம் நூற்றாண்டு கல்வெட்டு கண்டுபிடிப்பு
x
தினத்தந்தி 2 March 2021 10:42 PM IST (Updated: 2 March 2021 10:42 PM IST)
t-max-icont-min-icon

போடி அருகே கி.பி.16ம் நூற்றாண்டு கல்வெட்டை கண்டுபிடித்தனர்.

போடி:
தேனி மாவட்டம் போடி அருகே கொட்டக்குடி மலை கிராமம் உள்ளது. 

இந்த கிராமத்தில் போடி ஏலக்காய் விவசாய சங்க கல்லூரி முதல்வர் சிவக்குமார் வழிகாட்டுதலின்படி, வரலாற்றுத்துறை உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் தலைமையில் மாணவர்கள் கள ஆய்வு பணியில் ஈடுபட்டனர். அதில் ஒரு கல்வெட்டை கண்டுபிடித்தனர். 

இதுகுறித்து உதவி பேராசிரியர் மாணிக்கராஜ் கூறுகையில், கி.பி.16-ம் நூற்றாண்டை சேர்ந்த கல்வெட்டாகும். 

அதில் தேனி மாவட்டம் பாண்டியர்கள் காலத்தில் அழநாடு என்று அழைக்கப்பட்டுள்ளது. அந்த நாட்டின் உட்பிரிவான துறையூர் நாட்டில் கோவில்களில் இசை பாணநங்கனாக இருந்தவர் சம்பந்தன். 

அவருக்கு சிவன் கோவிலுக்கு சொந்தமான நிலங்களிலிருந்து ஒரு நில அளவு முறையில் அளந்து கொடுக்க வேண்டும் என்ற தகவல் இடம் பெற்றுள்ளது என்றார். 

Next Story