உடுமலை அருகே பறக்கும்படை சோதனை: காரில் வந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் சிக்கியது உரிய ஆவணம் இருந்ததால் திருப்பி ஒப்படைப்பு
உடுமலை அருகே பறக்கும் படையினர் சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் சிக்கியது. உரிய ஆவணம் இருந்ததால் பணம் உரியவரிடமே கொடுக்கப்பட்டது.
உடுமலை
உடுமலை அருகே பறக்கும் படையினர் சோதனையின் போது காரில் வந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் சிக்கியது. உரிய ஆவணம் இருந்ததால் பணம் உரியவரிடமே கொடுக்கப்பட்டது.
தேர்தல் நடத்தை விதிமுறைகள்
தமிழக தேர்தல் தேதி அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து, தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்துள்ளன. இந்த விதிமுறைகள் கடைபிடிக்கப்படுகிறதா? என்று கண்காணிப்பதற்காக ஒவ்வொரு சட்டமன்ற தொகுதிக்கும் 3 பறக்கும் படைகள், 3 நிலையான கண்காணிப்பு குழுக்கள் நியமிக்கப்பட்டுள்ளன. தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி உரிய ஆவணங்கள் இல்லாமல் ரூ.50 ஆயிரத்திற்கு மேல் கொண்டு செல்லக்கூடாது.
ரூ.2 லட்சம் சிக்கியது
இந்த நிலையில் நேற்று பறக்கும்படையினர் உடுமலையை அடுத்துள்ள குடிமங்கலம் நால்ரோடு பகுதியில் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது அந்த வழியாக வந்த ஒரு காரை பறக்கும்படை அதிகாரிகள் சோதனை செய்தனர். அப்போது அந்த காரில் வந்த பெண்ணிடம் ரூ.2 லட்சம் சிக்கியது. அந்த பணத்தை அதிகாரிகள் உடுமலை தாலுகா அலுவலகம் கொண்டு வந்தனர்.
இதற்கிடையில் அந்த பணத்தை கொண்டு வந்த பெண், வீடு கட்டும் வேலைக்கு தேவையான கட்டிட கட்டுமான பொருட்கள் வாங்குவதற்காக, வங்கியில் இருந்து பெற்று வந்ததாக தெரிவித்து வங்கி பாஸ்புத்தகத்தை (ஆவணம்) காட்டியுள்ளார். அந்த ஆவணம் சரியாக இருந்ததை தொடர்ந்து அந்த பணம் அவரிடமே திருப்பிக்கொடுத்தனர்.
Related Tags :
Next Story