நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா
தியாகதுருகத்தில் நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவிலில் முப்பெரும் விழா நடைபெற்றது.
கண்டாச்சிமங்கலம்,
தியாகதுருகம் பஸ் நிலையம் அருகே பழமை வாய்ந்த நஞ்சுண்ட தேசிக ஈஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் கும்பாபிஷேக முதலாம் ஆண்டு நிறைவு விழா, நஞ்சுண்டதேசிக சித்தர் பெருமானின் குருபூஜை மற்றும் வருட பிரமோத்ஷவம் என முப்பெரும் விழா நேற்று முன்தினம் கொடியேற்றத்துடன் தொடங்கியது. இதையடுத்து நேற்று காலை சாமிக்கு பால், தயிர், சந்தனம், இளநீர் உள்ளிட்ட 16 வகையான பொருட்களை கொண்டு அபிஷேகம் நடத்தப்பட்டது. பின்னர் கடைவீதியில் உள்ள விநாயகர் கோவிலில் இருந்து மேல, தாளங்கள் முழங்க 21 தட்டு சீர்வரிசைகள் கொண்டுவரப்பட்டு மலர்களால் அலங்கரிக்கப்பட்ட அண்ணாமலையார், உண்ணாமலை அம்பாளுக்கு திருக்கல்யாண நிகழ்ச்சி நடைபெற்றது. இதில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர். இன்று (புதன்கிழமை) 108 சங்காபிஷேகம்,, புனிதநீர் வழிபாடு, சாமிக்கு சந்தன காப்பு அலங்காரம் ஆகிய நிகழ்ச்சிகள் நடைபெறுகின்றன. இதைத்தொடர்ந்து 108 சாதுக்களுக்கு மாகேஷ்வர பூஜை நடைபெறுகிறது. இரவில் சாமி வீதி உலா நடைபெறுகிறது. நாளை (வியாழக்கிழமை) ஊஞ்சல் உற்சவ நிகழ்ச்சி நடைபெறும். நாளை மறுநாள் கொடி இறக்கத்துடன் விழா நிறைவடைகிறது. விழாவிற்கான ஏற்பாடுகளை ஊர் பொதுமக்கள் மற்றும் விழாக்குழுவினர் சிறப்பாக செய்து வருகின்றனர்.
Related Tags :
Next Story