மோட்டார் சைக்கிள்கள் மோதல் கொத்தனார் சாவு பெண் உள்பட 3 பேர் படுகாயம்


மோட்டார் சைக்கிள்கள் மோதல் கொத்தனார் சாவு  பெண் உள்பட 3 பேர் படுகாயம்
x
தினத்தந்தி 2 March 2021 11:19 PM IST (Updated: 2 March 2021 11:19 PM IST)
t-max-icont-min-icon

மோட்டார் சைக்கிள்கள் மோதல் கொத்தனார் சாவு

ஆவூர்:
விராலிமலை தாலுகா, மலம்பட்டியை சேர்ந்தவர் சவரிமுத்து (வயது 70). இவரது மகன் இன்னாசிமுத்து (36). இவரும் இவரது நண்பரான திருச்சி மாவட்டம் மருங்காபுரி தாலுகா கொடும்பப்பட்டி கிராமத்தை சேர்ந்த சுப்ரமணியன் (35) என்பவரும் நண்பர்கள். கொத்தனார் வேலை செய்து வந்த இருவரும் ஒரு மோட்டார் சைக்கிளில் சவரிமுத்துவை அழைத்துக்கொண்டு நேற்று முன்தினம் இரவு 7 அளவில் இலுப்பூர்-மாத்தூர் சாலையில் ஆவூருக்கு சென்று கொண்டிருந்தனர். மோட்டார் சைக்கிளை இன்னாசிமுத்து ஓட்டினார். அப்போது அவர்கள் மேலப்பட்டி அருகே சென்ற போது எதிரே இலுப்பூர் தாலுகா நாங்குப்பட்டி கிராமத்தைச் சேர்ந்த முத்துக்கருப்பன் மனைவி மகாலட்சுமி (32) என்பவர் ஓட்டி வந்த மொபட் மீது எதிர்பாராதவிதமாக இன்னாசிமுத்து ஓட்டிச்சென்ற மோட்டார் சைக்கிள் மோதி விபத்திற்குள்ளானது. இந்த விபத்தில் 2 மோட்டார் சைக்கிளில் வந்த 4 பேரும் படுகாயம் அடைந்தனர். இதை பார்த்த அவ்வழியே சென்றவர்கள் 4 பேரையும் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் சிகிச்சைக்காக திருச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். அங்கு சிகிச்சை பெற்று வந்த சுப்பிரமணியன் நேற்று பரிதாபமாக உயிரிழந்தார். மற்ற 3 பேரும் சிகிச்சை பெற்று வருகின்றனர். இதுகுறித்து மாத்தூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.

Next Story