லாரி டிரைவரிடம் பணம் பறித்தவர் கைது


லாரி டிரைவரிடம் பணம் பறித்தவர் கைது
x
தினத்தந்தி 2 March 2021 11:42 PM IST (Updated: 2 March 2021 11:42 PM IST)
t-max-icont-min-icon

லாரி டிரைவரிடம் பணம் பறித்தவர் கைது

அரவக்குறிச்சி
திண்டுக்கல் மாவட்டம், வேடசந்தூர் வெள்ளையம்பட்டியைச் சேர்ந்தவர் மனோஜ் (வயது 34). இவர் வேடசந்தூரில் உள்ள ஒரு லாரி கம்பெனியில் டிரைவராக வேலை பார்த்து வருகிறார். இவர், சம்பவத்தன்று லாரியில் வேடசந்தூரில் இருந்து திருப்பூர் செல்லும் போது கரூர்-திண்டுக்கல் தேசிய நெடுஞ்சாலையில் அரவக்குறிச்சி அருகே தேரப்பாடி பிரிவு அருகில் ஒரு உணவகம் அருகில் லாரியை நிறுத்திவிட்டு அருகே காட்டுப்பகுதியில் இயற்கை உபாதை கழிக்க சென்றுள்ளார். அப்போது மோட்டார் சைக்கிளில் வந்த 3 பேர், மனோஜை கொன்று விடுவதாக மிரட்டி அவரது சட்டை பாக்கெட்டில் இருந்து ரூ.700-ஐ பிடுங்கிக் கொண்டனர். மேலும், ஒருவர் லாரிக்குள் ஏறி பணத்தை தேடினார். அப்போது மனோஜ் கூச்சலிடவே அருகில் உள்ளவர்கள் ஓடி வந்தனர். அப்போது 2 பேர் காட்டுக்குள் தப்பி ஓடி விட்டனர். ஒருவர் மட்டும் பொதுமக்கள் பிடியில் சிக்கிக் கொண்டார். அவரை அரவக்குறிச்சி போலீசில் ஒப்படைத்தனர். அவரிடம், போலீசார் விசாரித்தபோது அவர், திண்டுக்கல் மாவட்டம், பழனி தாலுகா, பெரிச்சிபாளைத்தைச் சேர்ந்த சோமசுந்தரம் மகன் மணியன் (24) என்பது தெரிய வந்தது. அதன்பேரில், மணியன் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்து அவரை கைது செய்தனர். பின்னர் அவரை அரவக்குறிச்சி சார்பு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி நீதிபதி உத்தரவின்பேரில், குளித்தலை கிளைச் சிறையில் அடைத்தனர். மேலும், தப்பி ஓடிய 2 பேரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.

Next Story