சட்டத்திற்கு புறம்பாக சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் அச்சடித்தால் நடவடிக்கை
சட்டத்திற்கு புறம்பாக சுவரொட்டி, துண்டு பிரசுரங்கள் அச்சடித்தால் நடவடிக்கை எடுக்கப்படும் என கலெக்டர் எச்சரித்துள்ளார்.
கரூர்
சட்டமன்ற தேர்தலையொட்டி அச்சக உரிமையாளர்கள் கடைபிடிக்க வேண்டிய தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்த விளக்க கூட்டம் மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட கலெக்டருமான மலர்விழி தலைமையில் கரூர் மாவட்ட கலெக்டர் அலுவலக கூட்டரங்கில் நடைபெற்றது. கூட்டத்தில் கலெக்டர் தெரிவித்ததாவது:-
மக்கள் பிரதிநிதித்துவ சட்டம் 1951 பிரிவு 127 ஏ-ன் கீழ், தேர்தல் தொடர்பான அறிவிப்புகள், சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்கள் அச்சடித்து வழங்குதல் தொடர்பாக வழிமுறைகள் வகுக்கப்பட்டுள்ளது. அதன் அடிப்படையில், தேர்தல் தொடர்பான சுவரொட்டிகள் மற்றும் துண்டு பிரசுரங்களில் அச்சகத்தின் பெயர், அச்சக உரிமையாளர் பெயர், முகவரி போன்றவை அச்சிடப்பட்டிருக்க வேண்டும். அச்சக உரிமையாளர் அச்சடிக்கப்பட்ட சுவரொட்டி, துண்டு பிரசுரத்தின் 4 நகல் மற்றும் அதுகுறித்த விவரங்களை குறிப்பிட்டு 3 நாட்களுக்குள் சுவரொட்டி வெளியிடும் நபரை அடையாளம் காட்டக்கூடிய உறுதிமொழி படிவத்தை மாவட்ட தேர்தல் அலுவலருக்கு அனுப்ப வேண்டும்.
சட்டத்திற்கு புறம்பாகவோ, மதம் சாதி மற்றும் இனம் தொடர்பான ஆட்சேபனைகள் எழும் விதத்திலும், மொழி மற்றும் தனிப்பட்ட நபரின் நன்னடத்தை பாதிக்கப்படும் வகையிலோ சுவரொட்டிகள், துண்டு பிரசுரங்கள் அச்சடிக்க கூடாது. அவ்வாறு அச்சடிக்கப்பட்டு வெளியிடப்படும்போது, வெளியிடுபவர் மற்றும் அச்சடிப்பவரை அடையாளம் கண்டு, அவர்கள் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும். 6 மாத சிறை தண்டனையோ அல்லது ரூ.2 ஆயிரம் அபராதமோ அல்லது இரண்டும் விதிக்கப்படலாம். பிளாஸ்டிக் பயன்பாடு தடைசெய்யப்பட்டுள்ளதால் அச்சக உரிமையாளர்கள் பிளாஸ்டிக் பொருட்களில் அச்சடிக்கக் கூடாது. பிளக்ஸ் பேனர்கள் துணியில் அச்சடிக்கலாம். இதற்கு அனைவரும் தங்களின் முழு ஒத்துழைப்பினை அளிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் தெரிவித்தார். தொடர்ந்து வங்கியாளர்களுக்கு தேர்தல் நடத்தை விதிமுறைகள் குறித்து விளக்க கூட்டமும் நடைபெற்றது. கூட்டத்தில் தேர்தல் நடத்தும் அலுவலர்கள் பாலசுப்பிரமணியன் (கரூர்), ஷேக்அப்துல்ரகுமான் (குளித்தலை), தவச்செல்வம் (அரவக்குறிச்சி), தட்சிணாமூர்த்தி (கிருஷ்ணராயபுரம்), தேர்தல் பிரிவு தாசில்தார் பிரபு உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Related Tags :
Next Story