தென் மண்டல தடகள போட்டி:ராமநாதபுரம் மாணவிக்கு தங்கப்பதக்கம்
ராமநாதபுரம் மாணவிக்கு தங்கப்பதக்கம்
ராமநாதபுரம்
கேரளா மாநிலம் கோழிக்கோட்டில் தென் மண்டல அளவிலான இளையோர் தடகள போட்டிகள் நடைபெற்றன. இதில் கேரளா, தமிழகம், ஆந்திரா, தெலுங்கானா, கர்நாடாகா உள்ளிட்ட 8 மாநிலத்தை சேர்ந்த மாணவ-மாணவிகள் கலந்து கொண்டனர். இந்த போட்டியில் ராமநாதபுரத்தை சேர்ந்த சப்-இன்ஸ்பெக்டர் மோகன் மகள் ஐஸ்வர்யா (வயது 17) என்பவர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான தட்டு எறிதல் போட்டியில் 37.15 மீட்டர் தூரம் எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். மாணவி ஐஸ்வர்யா ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் உள்ள முகம்மது சதக் தஸ்தகீர் பள்ளியில் பிளஸ்-2 படித்து வருகிறார்.
இதேபோல, பரமக்குடியை சேர்ந்த அரசு கலைக்கல்லூரி மாணவி ஷர்மிளா என்பவர் 18 வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் 15.1 மீட்டர் தூரம் குண்டு எறிந்து முதலிடம் பிடித்து தங்கப்பதக்கம் பெற்று சாதனை படைத்துள்ளார். இதுதவிர, பரமக்குடியை சேர்ந்த மதுமிதா என்ற மாணவி 16-வயதுக்கு உட்பட்டோருக்கான குண்டு எறிதல் போட்டியில் 13.86 மீட்டர் தூரம் எறிந்து 2-ம் இடம் பிடித்து வெள்ளிபதக்கம் பெற்றுள்ளார். பரிசு பெற்ற மாணவி ஐஸ்வர்யாவை பயிற்சியாளர் சரவண சுதர்சன், பள்ளி முதல்வர் நந்தகோபால் மற்றும் ஆசிரியர்கள் பாராட்டினர்.
Related Tags :
Next Story