குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைப்பு


குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைப்பு
x
தினத்தந்தி 3 March 2021 12:36 AM IST (Updated: 3 March 2021 12:36 AM IST)
t-max-icont-min-icon

குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பு சீரமைப்பு

அரவக்குறிச்சி
காவிரி கூட்டுக்குடிநீர் திட்டம் மூலமாக நொய்யல் அருகே மரவாபாளையம் காவிரி ஆற்றிலிருந்து மின்மோட்டார் மூலமாக அரவக்குறிச்சி, பள்ளப்பட்டி மற்றும் சுற்றுவட்டார பொது மக்களுக்கு குடிநீர் வினியோகம் செய்யப்பட்டு வருகிறது. இந்தநிலையில், பள்ளபட்டி ரெங்கராஜ் நகர் மாரியம்மன் கோவில் அருகே குடிநீர் குழாயில் உடைப்பு ஏற்பட்டு பல நாட்களாக தண்ணீர் வீணாகி சாலையோரங்களிலும், அருகிலுள்ள குடியிருப்பு பகுதிகளிலும் தேங்கி நின்றது. மேலும், பெரும்பாலான குடிநீர் வீணானதால் போதிய குடிநீர் கிடைக்காமல் பொதுமக்கள் சிரமப்பட்டு வந்தனர். ஆகவே, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க வேண்டும் என்று பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர். இதுகுறித்து `தினத்தந்தி'யில் செய்தி பிரசுரமாகி இருந்தது. இதன் எதிரொலியாக, குடிநீர் குழாயில் ஏற்பட்ட உடைப்பை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர். அதனைத்தொடர்ந்து உடைப்பு ஏற்பட்ட இடத்தில் பொக்லைன் எந்திரம் மூலமாக குழிதோண்டி உடைப்பு சீரமைக்கப்பட்டது. இதுகுறித்து நடவடிக்கை எடுத்த அதிகாரிகளுக்கும், செய்தி வெளியிட்டு உதவிய 'தினத்தந்தி'க்கும் பொதுமக்கள் நன்றி தெரிவித்துக் கொண்டனர்.

Next Story