பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவர் பிணமாக மீட்பு


பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவர் பிணமாக மீட்பு
x
தினத்தந்தி 3 March 2021 12:43 AM IST (Updated: 3 March 2021 12:43 AM IST)
t-max-icont-min-icon

பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.

பள்ளிபாளையம்:
பள்ளிபாளையம் அருகே காவிரி ஆற்றில் மூழ்கிய மேலும் ஒருவர் பிணமாக மீட்கப்பட்டார்.
நண்பர்கள்
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள தோக்கவாடி நெசவாளர் காலனியை சேர்ந்தவர் வீரமணி (வயது 35). தச்சுத்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் பிரகதிராஜ் (20). சென்ட்ரிங் தொழிலாளி. நண்பர்களான இவர்கள் 2 பேரும் கடந்த மாதம் 28-ந் தேதி பள்ளிபாளையத்தை அடுத்த பாப்பம்பாளையம் காவிரி ஆற்றுக்கு குளிக்க சென்றனர்.
அவர்கள் ஆற்றில் இறங்கி குளித்தபோது, ஆழமான பகுதிக்கு சென்றதாக கூறப்படுகிறது. அப்போது அவர்கள் திடீரென தண்ணீரில் மூழ்கினர். இதுகுறித்து பள்ளிபாளையம் போலீசார், வெப்படை தீயணைப்பு நிலையத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் விரைந்து வந்த அவர்கள் தண்ணீரில் மூழ்கிய 2 பேரையும் தேடும் பணியில் ஈடுபட்டனர். 
உடல் மீட்பு
இதனிடையே நேற்று முன்தினம் மாலை தச்சுத்தொழிலாளி வீரமணி பிணமாக மீட்கப்பட்டார். தொடர்ந்து பிரகதிராஜை தேடும் பணியில் போலீசார், தீயணைப்பு படையினர் தீவிரமாக ஈடுபட்டனர். 
இந்தநிலையில் நேற்று முந்தினம் நள்ளிரவில், பிரகதிராஜும் பிணமாக மீட்கப்பட்டார். இதையடுத்து அவரது உடல் பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் பிரேத பரிசோதனை செய்யப்பட்டு உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

Next Story