கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீ
கொடைக்கானல் வனப்பகுதியில் பயங்கர தீவிபத்து ஏற்பட்டது.
கொடைக்கானல்:
மலைகளின் இளவரசியான கொடைக்கானல் பகுதியில் தற்போது குளிர் சீசன் நிலவிய போதிலும், பகல் நேரத்தில் கடுமையான வெப்பம் நிலவுகிறது. இதன் காரணமாக வனப்பகுதியில் உள்ள மரங்கள் கருகி வருகின்றன. இந்தநிலையில் வத்தலக்குண்டு-கொடைக்கானல் சாலையில் வெள்ளி நீர்வீழ்ச்சி அருகே வனப்பகுதியில் நேற்று இரவு பயங்கர தீ விபத்து ஏற்பட்டது. அங்குள்ள அரசுக்கு சொந்தமான தேன் பண்ணை மற்றும் தனியார் தோட்ட பகுதியில் தீ கொழுந்து விட்டு எரிந்தது.
இதன் எதிரொலியாக வனப்பகுதியில் உள்ள விலங்குகள் நாலாபுறமும் ஓடின. மேலும் புகைமூட்டத்தால் கொடைக்கானல் நகர் பகுதியில் வசிக்கிற மக்கள் கடுமையாக பாதிக்கப்பட்டனர். இதுகுறித்து தகவல் அறிந்த வனத்துறையினர் மற்றும் தீயணைப்பு படையினர் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டுள்ளனர். தற்போது கோடை காலம் தொடங்கி உள்ளதால் வனப்பகுதிகளில் தீ விபத்து ஏற்படுவதை தடுக்க தீத்தடுப்பு கோடுகள் ஏற்படுத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
Related Tags :
Next Story