விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற எதிா்ப்பு- விருத்தாசலத்தில் பரபரப்பு
விருத்தகிரீஸ்வரர் கோவிலில் ஆக்கிரமிப்பு கடைகளை அகற்ற வந்த அதிகாரிகளால் பரபரப்பு ஏற்பட்டது.
விருத்தாசலம்,
விருத்தாசலத்தில் பிரசித்தி பெற்ற விருத்தகிரீஸ்வரர் கோவில் அமைந்துள்ளது. இந்த கோவிலை சுற்றி ஆக்கிரமிப்புகள் உள்ளது. இதில் கோவில் முன்பகுதியில் 12 பேர் கடை வைத்து ஆக்கிரமித்துள்ளதாக தெரிகிறது. இந்த கடைகளை அகற்ற வேண்டும் என சம்பந்தப்பட்டவர்களுக்கு இந்து சமய அறநிலையத்துறை சார்பில் 12 பேருக்கும் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது.
நேற்று இந்து சமய அறநிலையத்துறை கடலூர் மாவட்ட உதவி ஆணையர் பரணிதரன், செயல் அலுவலர் முத்துராஜா, ஆய்வாளர் லட்சுமி நாராயணன் மற்றும் அதிகாரிகள், பலத்த போலீஸ் பாதுகாப்புடன் கோவில் முகப்பில் இருந்த கடைகளை அகற்ற வந்தனர்.
அப்போது அங்கு திரண்டு வந்த கடை உரிமையாளர்கள் மற்றும் அவர்களது ஆதரவாளர்கள் திடீரென கடைகளை அகற்றினால் தங்களது வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனவும், தங்களுக்கு ஒருவாரகாலம் அவகாசம் வேண்டும் என்றும் தெரிவித்தனர். இதையேற்று அதிகாரிகள் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையை தற்காலிகமாக கைவிட்டு அங்கிருந்து புறப்பட்டு சென்றனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.
Related Tags :
Next Story