நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 25 பேர் இமாற்றம்


நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 25 பேர் இமாற்றம்
x
தினத்தந்தி 3 March 2021 2:33 AM IST (Updated: 3 March 2021 2:33 AM IST)
t-max-icont-min-icon

நெல்லையில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்கள் 25 பேர் இமாற்றம் செய்யப்பட்டனர்.

நெல்லை, மார்ச்:
நெல்லை மாநகரத்தில் பாளையங்கோட்டை போலீஸ் நிலையத்தில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய மகேஷ்குமார், வெடிகுண்டு தடுப்பு பிரிவுக்கும், முத்துக்குமார் தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். பெருமாள்புரம் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய நயினார் தீவிர குற்றத்தடுப்பு பிரிவுக்கும், சிவகாளை, சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கும், சுதர்சன், டவுன் போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர்.

சந்திப்பு போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய தில்லைநாயகம், பேட்டை போலீஸ் நிலையத்திற்கும், துரைப்பாண்டியன், பாளையங்கோட்டை குற்றப்பிரிவுக்கும், சந்திப்பு குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய சாமி, பாளையங்கோட்டை குற்றப்பிரிவுக்கும், பழனிமுருகன், தச்சநல்லூர் போலீஸ் நிலையத்திற்கும், பாளையங்கோட்டை குற்றப்பிரிவில் சப்-இன்ஸ்பெக்டர்களாக பணியாற்றிய மரிய பிரான்சிஸ் சேவியர், சந்திப்பு போலீஸ் நிலையத்திற்கும் இடமாற்றம் செய்யப்பட்டனர். இதேபோல் மொத்தம் 25 பேர் இடமாற்றம் செய்யப்பட்டுள்ளனர்.
இதற்கான உத்தரவை நெல்லை மாநகர போலீஸ் கமிஷனர் அன்பு பிறப்பித்து உள்ளார்.

Next Story