அம்பையில் நாளை அய்யா அவதார தின ஊர்வலம்
அம்பை வாகைபதியில் நாளை அய்யா அவதார தின ஊர்வலம் நடக்கிறது.
அம்பை, மார்ச்:
அம்பை அருகே உள்ள வாகை பதியில் ஒவ்வொரு ஆண்டும் தை பெருந்திருவிழா மற்றும் ஆவணி பெருந்திருவிழா 11 நாட்கள் நடைபெறும். 8-ம் திருநாள் அன்று பால்குடம் ஊர்வலமும், 11-ம் திருநாள் அன்று பால்குடம் மற்றும் சந்தன குடம் ஊர்வலம், தேரோட்டமும் நடைபெறும். அதேபோல் மாசி 20-ந்தேதி அய்யா வைகுண்டர் பிறந்ததினத்தை அவதார தின விழாவாக கொண்டாடப்படுகிறது. அன்றைய தினம் மாசிமகா ஊர்வலம் நடைபெறுகிறது. கடந்த 2012-ம் ஆண்டு முதல் வாகைபதி அன்பு கொடிமக்களால் ஊர்வலம் நடத்தப்பட்டு வருகிறது.
இந்த ஆண்டுக்கான மாசிமகா ஊர்வலம் நாளை (வியாழக்கிழமை) மாலை 3 மணி அளவில் அம்பை கிருஷ்ணன் கோவில் திடலில் இருந்து புறப்படுகிறது. இதில் வாகைபதி அய்யா வைகுண்டர் அனுமன் வாகனத்தில் எழுந்தருளி ஊர்வலமாக செல்கிறார். அம்பை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் உள்ள ஒவ்வொரு பதியில் இருந்தும் அய்யா வைகுண்டர் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி அம்பை கிருஷ்ணன் கோவிலில் இருந்து புறப்பட்டு ஊர்வலம் வாகைபதி சென்றடைகிறது. அங்கு சிறப்பு பணிவிடைகள் நடைபெறும். தொடர்ந்து அன்னதர்மம் நடைபெறுகிறது.
Related Tags :
Next Story