திருவண்ணாமலையில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடல்
திருவண்ணாமலையில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் மூடப்பட்டன.
திருவண்ணாமலை,
தமிழகத்தில் சட்டமன்ற தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. தேர்தல் தேதி அறிவிக்கப்பட்ட நாளில் இருந்து தேர்தல் நடத்தை விதிகள் அமலுக்கு வந்தது. இதனால் அரசியல் கட்சிகளின் சுவர் விளம்பரங்களை அழிக்கும் பணிகளில் துறை சார்ந்த அலுவலர்கள் மூலம் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும் எம்.எல்.ஏ., எம்.பி.க்களின் அலுவலகங்களுக்கு சீல் வைக்கப்பட்டது. ஒரு சில இடங்களில் அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகளை மூடி வைக்கும் பணியில் அதிகாரிகள் ஈடுபட்டனர்.
இந்த நிலையில் திருவண்ணாமலை சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள அண்ணா, எம்.ஜி.ஆர்., காமராஜர் உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்களின் சிலைகள் துணி சுற்றி மூடப்பட்டன. மேலும் கட்சி கொடிகள் அகற்றப்பட்டு வருகின்றன.
Related Tags :
Next Story