வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம்


வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவில் தேரோட்டம்
x
தினத்தந்தி 3 March 2021 4:00 AM IST (Updated: 3 March 2021 4:00 AM IST)
t-max-icont-min-icon

வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் 2 நாட்கள் மட்டும் தேரோட்டம் நடத்த தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.

வெள்ளகோவில்:
வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் 2 நாட்கள் மட்டும் தேரோட்டம் நடத்த தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் உத்தரவிட்டார்.
இதுகுறித்து அவர் கூறியதாவது
வீரக்குமாரசாமி கோவில்
 திருப்பூர் மாவட்டம் வெள்ளகோவில் வீரக்குமாரசாமி தேர்த்திருவிழா ஆண்டு தோறும் மாசி மகா சிவராத்திரியை யொட்டி 3 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். 
தற்போது கொரோனா தொற்று நோய் பரவல் காரணமாக, வெள்ளகோவில் வீரக்குமாரசாமி கோவிலில் 2 நாட்கள் மட்டும் தேரோட்டம் நடைபெறும்.
மேலும் திருவிழாவை முன்னிட்டு திருவிழா நாட்களில் தீர்த்த காவடி, தண்டல் மற்றும் அபிஷேகம் செய்ய பக்தர்களுக்கு அனுமதி இல்லை. இவ்வாறு  அவர் தெரிவித்துள்ளார்.
வீரக்குமாரசாமி கோவிலில்  மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு கடந்த மாதம் (பிப்ரவரி) 22-ந்தேதி காலை தேர் திருவிழா, தேர் முகூர்த்தக்கால் நடும் விழா நடைபெற்றது. நாளை மறுநாள் (வெள்ளிக்கிழமை) காலை 8 மணி முதல் 10 மணிக்குள் தேரில் கலசம் வைக்கும் நிகழ்ச்சி நடைபெற உள்ளது.
2 நாள் தேரோட்டம்
வருகிற 11-ந்தேதி  பிற்பகல் 3 மணியளவில் பள்ளைய பூஜை, மாலை 4.30 மணிக்கு சாமி ரதத்திற்கு எழுந்தருளச்செய்தல், மாலை 5.30 மணிக்கு தேர்தல் நிலை பெயர்த்தல் நிகழ்ச்சி மற்றும் தேரோட்டம் நடைபெறும். 
மறுநாள் 12-ந்தேதி மாலை 4.30 மணி முதல் 5.30 மணிக்குள் தேரோட்டம் மற்றும் தேர் நிலை சேரும், சுவாமி தேர்க்கால் பவனி, தேவஸ்தான மண்டப கட்டளை ஆகியவை  நடைபெற உள்ளது. 
தேரோட்டத்திற்கான ஏற்பாடுகளை கோவில் நிர்வாகத்தினர் மற்றும் கோவில் குலத்தவர்கள், கோவில் நற்பணி மன்றத்தினர், பக்தர்கள் செய்து வருகின்றனர்.

Next Story