கலசபாக்கத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு ‘சீல்’ வைப்பு
தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கலசபாக்கத்தில் எம்.எல்.ஏ. அலுவலகத்துக்கு தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
கலசபாக்கம்,
தமிழக சட்டமன்ற தேர்தல் அடுத்தமாதம் 6-ந் தேதி நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது. இதனால் தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ளது. அதைத்தொடர்ந்து தேர்தல் நடத்தை விதிமுறைகளின்படி கலசபாக்கத்தில் உள்ள கலசபாக்கம் தொகுதி எம்.எல்.ஏ. அலுவலகத்தை தேர்தல் அதிகாரிகள் பூட்டி சீல் வைத்தனர்.
மேலும் கலசபாக்கம் பஸ் நிறுத்தம் அருகில் வைக்கப்பட்டிருந்த பேனர்களையும் அகற்றினார்கள். இதனை தொடர்ந்து கலசபாக்கத்தில் தேர்தல் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.
Related Tags :
Next Story