வாலாஜா டோல்கேட்டில் ரூ.7 லட்சம் குட்கா பாக்குகள், புகையிலை பொருட்கள் மினிவேனுடன் பறிமுதல்

வாலாஜா டோல்கேட்டில் ரூ.7 லட்சம் குட்கா பாக்குகள், புகையிலை பொருட்கள் மினிவேனுடன் பறிமுதல்
x
தினத்தந்தி 3 March 2021 7:30 PM IST (Updated: 3 March 2021 7:30 PM IST)
t-max-icont-min-icon

வாலாஜா டோல்கேட்டில் ரூ.7 லட்சம் குட்கா பாக்குகள், புகையிலை பொருட்கள் மினிவேனுடன் பறிமுதல்

வாலாஜா

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜா டோல்கேட்டில் வாலாஜா போலீஸ் இன்ஸ்ெபக்டர் பாலு தலைமையில் சப்-இன்ஸ்பெக்டர்கள் வெங்கட்ராமன், ரகுபதி, பாஸ்கர் ஆகியோர் நேற்று முன்தினம் மாலை தீவிர வாகனச் சோதனையில் ஈடுபட்டனர். 

அப்போது அந்த வழியாக பெங்களூருவில் இருந்து சென்னையை நோக்கி வந்த ஒரு மினிவேைன நிறுத்தி சோதனைச் செய்தனர். அதில் ரூ.7 லட்சம் மதிப்பிலான குட்கா பாக்குகள் மற்றும் ஹான்ஸ் புகையிலைப் பொருள்கள் கடத்தி வரப்பட்டது தெரிய வந்தது. 

இதையடுத்து மினிவேன், குட்கா பாக்குகள், புகையிலைப் பொருட்கள் ஆகியவற்ைற பறிமுதல் செய்தனர். மினிவேன் டிரைவர் தூத்துக்குடியைச் சேர்ந்த சின்னதம்பி (வயது 27), அவருடன் வந்த சாத்தான்குளம் பகுதியைச் சேர்ந்த ஆர்த்தி வில்சன் (23) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். 

Next Story