குமரலிங்கம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் தீ விபத்து எந்திரங்கள் சேதம்
குமரலிங்கம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்டதீ விபத்த்தில் தென்னை நார்கள் மற்றும் எந்திரங்கள் சேதம் அடைந்தன.
குமரலிங்கம்
குமரலிங்கம் அருகே தென்னை நார் தொழிற்சாலையில் ஏற்பட்டதீ விபத்த்தில் தென்னை நார்கள் மற்றும் எந்திரங்கள் சேதம் அடைந்தன.
பயங்கர தீ விபத்து
உடுமலையை அடுத்துள்ள ஆண்டிய கவுண்டனூர் ஊராட்சிக்குட்பட்ட பகுதியில் அசோக் என்பவர் தென்னை நார் தொழிற்சாலை நடத்தி வருகிறார். இந்த தொழிற்சாலையில் 30-க்கும் மேற்பட்ட வடநாட்டு தொழிலாளர்கள் தங்கி பணிபுரிந்து வருகின்றனர். இந்நிலையில் நேற்று தொழிற்சாலையில் நேற்று மதியம் 12.45 மணிக்கு திடீரென ஏற்பட்ட தீ விபத்து ஏற்பட்டது. தொழிலாளர்கள் அலறி அடித்து ஓட்டம் பிடித்தனர்.
உடனே உடுமலை தீயணைப்பு துறையினருக்கு தகவல் கொடுத்தனர். தீயணைப்பு துறை நிலைய அலுவலர் ஹரி ராமகிருஷ்ணன் தலைமையில் வீரர்கள் விரைந்து சென்று தீயை தண்ணீரை ஊற்றி போராடி அணைத்தனர்.
எந்திரங்கள் சேதம்
இதில் வெளிநாட்டுக்கு ஏற்றுமதி செய்யப்படவிருந்த தென்னை நார்கள் மற்றும் தொழிற்சாலையில் உள்ள எந்திரங்கள் முற்றிலும் எரிந்து சேதம் ஆனது.
அனைவரும் வேலை செய்து கொண்டிருந்த போது விபத்து ஏற்பட்டதால் மின்கசிவு காரணமாக தீ விபத்து ஏற்பட்டிருக்கலாம் என அவர் கூறினார்.
Related Tags :
Next Story