தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது
தடுப்பு காவல் சட்டத்தில் வாலிபர் கைது செய்யப்பட்டார்.
கள்ளக்குறிச்சி,
கச்சிராயப்பாளையம் அருகே கரடிசித்தூர் கிராமத்தை சேர்ந்தவர் அலெக்ஸ்பாண்டியன் (வயது 27). சாராயம் விற்பனை செய்தது தொடர்பாக இவரை கச்சிராயப்பாளையம் போலீசார் கைது செய்து கடலூர் மத்திய சிறையில் அடைத்தனர். தொடர்ந்து சாராயம் விற்பனை செய்து வந்ததால், இவரை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய கள்ளக்குறிச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு ஜியாவுல்ஹக் கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். இதையடுத்து கலெக்டர் கிரண்குராலா, அலெக்ஸ்பாண்டியனை தடுப்பு காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய போலீசாருக்கு உத்தரவிட்டார். இதையடுத்து தடுப்புகாவல் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டதற்கான உத்தரவு நகை கடலூர் மத்திய சிறையில் இருக்கும் அலெக்ஸ்பாண்டியனுக்கு அலுவலர்கள் மூலம் போலீசார் வழங்கினர்.
Related Tags :
Next Story