அச்சு முறிந்ததால் சாலையில் சாய்ந்து நின்ற லாரி


அச்சு முறிந்ததால் சாலையில் சாய்ந்து நின்ற லாரி
x
தினத்தந்தி 3 March 2021 6:24 PM GMT (Updated: 3 March 2021 6:24 PM GMT)

கூத்தாநல்லூர் அருகே நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றபோது அச்சு முறிந்ததால் சாலையில் லாரி சாய்ந்து நின்றது.

கூத்தாநல்லூர்:
கூத்தாநல்லூர் அருகே நெல்மூட்டைகளை ஏற்றிச்சென்றபோது அச்சு முறிந்ததால் சாலையில் லாரி சாய்ந்து நின்றது. 
அச்சு முறிந்தது
கூத்தாநல்லூர் அருகே உள்ள வேளுக்குடி அரசு நெல் கொள்முதல் நிலையத்திலிருந்து நெல் மூட்டைகளை ஏற்றி கொண்டு நேற்று மதியம் லாரி ஒன்று மன்னார்குடி நோக்கி சென்றுகொண்டிருந்தது. கூத்தாநல்லூர் அருகே உள்ள கீழபனங்காட்டாங்குடி என்ற இடத்தில் லாரி சென்று கொண்டிருந்தது. 
அப்போது லாரியின் பின்பக்கம் உள்ள டயர்களை தாங்கி நிற்கும் அச்சு திடீரென முறிந்தது. இதனால் முறிந்த அச்சுகளுடன் இரண்டு டயர்களும் லாரியிலிருந்து வெளியே தனியாக சென்றது. அப்போது லாரி சாலையில் சாய்ந்தநிலையில் நின்றது. ஆனால் முறிந்துள்ள அச்சு லாரி கவிழ்ந்து விடாமல் தாங்கி நின்றது. இதனால் லாரி  சாய்ந்தே நின்றது. மேலும் லாரியை ஒட்டி சென்ற டிரைவர் விபத்தில் சிக்காமல் தப்பினார். 
உயிர் சேதம் தவிர்ப்பு
விபத்து நடந்த இடத்தில் அதிக வீடுகள் உள்ளது. மேலும் அப்பகுதி மக்கள் நடமாட்டம் அதிகம் உள்ளதாகும். ஆனால் மதியம் நேரம் என்பதாலும், வெயில் அதிகமாக காணப்பட்டதாலும் விபத்து நடந்த இடத்தில் மக்கள் நடமாட்டம் இல்லை. இதனால் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.

Next Story