மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்


மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரம்
x
தினத்தந்தி 3 March 2021 6:30 PM GMT (Updated: 3 March 2021 6:30 PM GMT)

மூங்கில்துறைப்பட்டு பகுதியில் மஞ்சள் அறுவடை பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர்.

மூங்கில்துறைப்பட்டு, 

மூங்கில்துறைப்பட்டு மற்றும் அதனை சுற்றியுள்ள புதுப்பட்டு, லக்கிநாயக்கன்பட்டு, மூலக்காடு, மல்லாபுரம், ஆணைமடுவு, புளியங்கொட்டை உள்பட பல்வேறு கிராமங்களில் விவசாயிகள் அதிக நிலப்பரப்பில் சொட்டு நீர் பாசனம் மூலம் மஞ்சள் பயிரிட்டு பராமரித்து வந்தனர். தற்போது பயிர்கள் விளைந்ததை அடுத்து மஞ்சளை அறுவடை செய்யும் பணியில் விவசாயிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றனர். 
இது குறித்து விவசாயிகள் கூறுகையில், பெரும் செலவு செய்து  மஞ்சள் பயிரிட்டு பராமரித்து வந்தோம். தற்போது அறுவடை பணிகளில் ஈடுபட்டு வருகிறோம். இருப்பினும் எங்கள் பகுதியில் மஞ்சள் தொழிற்சாலை அமைக்கப்படாத காரணத்தால், அறுவடை செய்யப்பட்ட மஞ்சளை வெளியூர் வியாபாரிகளிடம் விற்பனை செய்ய வேண்டிள்ளது. அவர்கள் வாகன போக்குவரத்து செலவை கூறி எங்களது மஞ்சளை குறைந்து விலைக்கு கொள்முதல் செய்து வருகின்றனர்.

நஷ்டம்

தற்போது 100 கிலோ கொண்ட ஒரு மூட்டை மஞ்சள் ரூ.10 ஆயிரம் முதல் ரூ.12 ஆயிரம் வரை விற்பனையாகிறது. இந்த விலை எங்களுக்கு போதுமானதாக இல்லை. ஏற்கனவே மழையால் பயிர்கள் சேதமானதால் மஞ்சள் விளைச்சல் குறைந்துள்ளது. இந்த நிலையில் விலையும் குறைந்துள்ளதால் எங்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும் சூழ்நிலை உருவாகியுள்ளது. இதனால் நாங்கள் பெரும் கவலை அடைந்துள்ளோம். ரூ.15 ஆயிரம் வரை மஞ்சள் விற்பனையானால் மட்டுமே எங்களுக்கு ஒரளவுக்கு வருமானம் கிடைக்கும் என்றனர்.

Next Story