மஞ்சூர் அருகே சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் நூதன போராட்டம்
மஞ்சூர் அருகே சாலையை சீரமைக்காததை கண்டித்து பொதுமக்கள் நூதன போராட்டம் நடத்தினர்.
ஊட்டி,
மஞ்சூர் அருகே மைனலா மட்டம்-தேனாடு இடையே சாலை செல்கிறது. இந்த சாலை பழுதடைந்ததால் குண்டும், குழியுமாக காணப்படுகிறது. சமீபத்தில் பெய்த மழையால் சாலையில் தண்ணீர் தேங்கி நிற்கிறது.
இதனால் வாகன ஓட்டிகள் மற்றும் பொதுமக்கள் அவதி அடைந்து வருகின்றனர். இந்த நிலையில் நேற்று திடீரென அப்பகுதி பொதுமக்கள் சாலையை சீரமைக்காததை கண்டித்து நூதன போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்கள் சாலையில் தேங்கி இருந்த தண்ணீரில் காகித கப்பல்களை செய்து விட்டனர்.
இதுகுறித்து அவர்கள் கூறும்போது, மஞ்சூர் சாலையில் இருந்து மைனலா மட்டம், தேனாடு உள்ளிட்ட கிராமங்களுக்கு தார் சாலை செல்கிறது. ஏற்கனவே பலமுறை சாலையை சீரமைக்க மனு அளித்தும், சாலை சீரமைக்கப்படவில்லை.
தற்போது தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலுக்கு வந்ததை காரணம் காட்டி தள்ளிப் போடப்படுகிறது. இதனால் நாங்கள் கடும் அவதியடைந்து வருகிறோம் என்றனர்.
Related Tags :
Next Story