ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு


ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி பறிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 12:18 AM IST (Updated: 4 March 2021 12:18 AM IST)
t-max-icont-min-icon

ஓடும் பஸ்சில் மூதாட்டியிடம் 3½ பவுன் சங்கிலி பறிக்கப்பட்டது.

கீரமங்கலம், மார்ச்.4-
கீரமங்கலம் அருகே உள்ள அணவயல் தடியமனையை சேர்ந்தவர் கணேசன். இவரது மனைவி அகிலாண்டம் (வயது 65). நேற்று, இவர் செரியலூர் இனாம் கிராமத்தில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டு மீண்டும், சொந்த ஊருக்கு தனியார் பஸ்சில் ஏறி சென்றார். புளிச்சங்காடு கைகாட்டி பஸ்நிறுத்தத்தில் இறங்கும் போது, தனது கழுத்தில் அணிந்திருந்த 3½ பவுன் தங்க சங்கிலியை காணவில்லை. ஓடும் பஸ்சில் யாரோ மர்ம நபர் பறித்து சென்றுள்ளார். இது குறித்து அகிலாண்டம் கீரமங்கலம் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தார். சம்பவம் நடந்த தனியார் பஸ்சில் கண்காணிப்பு கேமரா இருந்தால் அவற்றை ஆய்வு செய்ய போலீசார் திட்டமிட்டுள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.




Next Story