ஆனைமலை பகுதியில் வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி ஆய்வு
ஆனைமலையில் உள்ள வாக்குச்சாவடிகளில் தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி ஆய்வு மேற்கொண்டார்.
பொள்ளாச்சி,
வால்பாறை சட்டமன்ற தொகுதி சமவெளி மற்றும் மலைப் பகுதியை கொண்டது. இந்த தொகுதியில் ஆண் வாக்காளர்கள் 98,617 பேரும், பெண் வாக்காளர்கள் 1,06,699 பேர், 3-ம் பாலினத்தை சேர்ந்தவர்கள் 19 பேர் என மொத்தம் 2,05,335 பேர் உள்ளனர்.
வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக மொத்தம் 294 வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு உள்ளன. தற்போது ஆனைமலை, கோட்டூர் பகுதிகளில் வாக்குச்சாவடிகளில் எண் எழுதும் பணி நடைபெற்று வருகிறது.
இந்த நிலையில் ஆனைமலையில் வாக்குச்சாவடிகளை தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி பார்வையிட்டு ஆய்வு செய்தார். அப்போது அவர் வாக்குச்சாவடிகளில் கழிப்பிட வசதி, சாய்வுதளம் உள்ளிட்ட அடிப்படை வசதிகள் உள்ளதா? என்று ஆய்வு நடத்தினார்.
அப்போது உதவி தேர்தல் நடத்தும் அலுவலர் ராஜா, தேர்தல் பிரிவு தனி தாசில்தார் முருகேசன் ஆகியோர் உடன் இருந்தனர்.
இதுகுறித்து தேர்தல் நடத்தும் அதிகாரி துரைசாமி கூறும்போது, அனைத்து வாக்குச்சாவடிகளிலும் குடிநீர், மாற்றுத்திறனாளி களுக்கு சாய்வுதளம், கழிப்பிட வசதிகள் அமைக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு உள்ளது என்றார்.
Related Tags :
Next Story