பெண்ணிடம் நகை பறிப்பு


பெண்ணிடம் நகை பறிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 2:20 AM IST (Updated: 4 March 2021 2:20 AM IST)
t-max-icont-min-icon

வீரவநல்லூர் அருகே பெண்ணிடம் மர்மநபர் நகையை பறித்துச் சென்றார்.

சேரன்மாதேவி, மார்ச்:
வீரவநல்லூர் அருகே உள்ள வெள்ளாங்குளி கிராமத்தை சேர்ந்தவர் மாடசாமி. இவரது மனைவி பேச்சியம்மாள் (வயது 24). இவர் நேற்று காலை வீட்டு வாசல் முன்பு கோலம் போட்டுக் கொண்டிருந்தார். அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த மர்ம நபர், பேச்சியம்மாள் கழுத்தில் கிடந்த 5 பவுன் தங்க சங்கிலியை பறித்துச் சென்றார். இதுகுறித்து பேச்சியம்மாள் அளித்த புகாரின் பேரில் வீரவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

Next Story