கிருஷ்ணகிரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு


கிருஷ்ணகிரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் கொடி அணிவகுப்பு
x
தினத்தந்தி 3 March 2021 11:40 PM GMT (Updated: 3 March 2021 11:42 PM GMT)

கிருஷ்ணகிரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடத்தினர்.

கிருஷ்ணகிரி,

தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் வருகிற ஏப்ரல் 6-ந் தேதி நடைபெற உள்ளது. இந்த நிலையில், கிருஷ்ணகிரி மாவட்டத்தில் 6 சட்டசபை தொகுதிகளிலும் தேர்தலை பாதுகாப்பாகவும், அமைதியாகவும் நடத்துவதற்காக, கர்நாடக மாநிலம் மங்களூரில் இருந்து மத்திய தொழில் பாதுகாப்பு படையை சேர்ந்த 92 வீரர்கள் கிருஷ்ணகிரிக்கு வந்துள்ளனர். 

இந்த தேர்தலில் பொதுமக்கள் அச்சம் இல்லாமல் வாக்களிக்கவும், பாதுகாப்புடன் தேர்தல் நடத்தப்படும் என்பதை வலியுறுத்தி பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில், கிருஷ்ணகிரியில் மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் மற்றும் போலீசார் கொடி அணிவகுப்பு நடந்தது.  கிருஷ்ணகிரி பழையபேட்டை மேல்தெருவில் தொடங்கிய கொடி அணி வகுப்பை கிருஷ்ணகிரி துனை போலீஸ் சூப்பிரண்டு சரவணன் தொடங்கி வைத்தார். 

துப்பாக்கி ஏந்தி...

இதில் கம்பெனி கமாண்டர் நாகராஜப்பா, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் பாஸ்கர், சுரேஷ்குமார், கணேஷ்குமார், வெங்கடாசலம், சப்-இன்ஸ்பெக்டர் சிவசந்தர் மற்றும் பலர் கலந்து கொண்டனர். இந்த கொடி அணிவகுப்பு பழையபேட்டை, காந்திரோடு, 5  ரோடு ரவுண்டானா, சென்னை சாலை, பெரிய மாரியம்மன் கோவில் தெரு, பெங்களூரு சாலை வழியாக ஆர்.சி.பள்ளியை சென்று நிறைவடைந்தது. இதில், மத்திய தொழில் பாதுகாப்பு படையினர் துப்பாக்கி ஏந்தி சென்றனர்.

Next Story