மாவட்ட செய்திகள்

உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது + "||" + Fraudster arrested for offering job at World Bank

உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது

உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக மோசடி செய்தவர் கைது
சென்னை தரமணி அசென்டாஸ் சாலையில் உலக வங்கி உள்ளது. இந்த வங்கியின் சிறப்பு பாதுகாப்பு அதிகாரியான சரத் சந்தர், தரமணி போலீஸ் நிலையத்தில் ஒரு புகார் செய்தார்.
அதில், உலக வங்கியில் வேலை வாங்கி தருவதாக சிலர் நேர்முகத்தேர்வு நடத்தி ஏமாற்றுவதாக ஒரு பெண் இ-மெயில் மூலம் புகார் தெரிவித்தார். இது பற்றி உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கூறியிருந்தார்.

அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து இ-மெயில் அனுப்பிய பெண்ணிடம் தரமணி போலீசாரும், அடையாறு சைபர் கிரைம் போலீசாரும் இணைந்து விசாரித்தனர். அப்போது அந்த பெண், உலக வங்கியில் வேலைக்கு விண்ணப்பித்து இருந்தேன். ஆனால் தன்னை நிராகரித்த பிறகு அதே வங்கியில் இருந்து நேர்காணலுக்கு அழைப்பு வந்தது. அங்கு சென்றபோது வங்கி தொடர்பான கேள்விகள் கேட்காமல் உடை, உருவம் பற்றி அநாகரீகமாக கேள்வி கேட்டதால் சந்தேகத்தில் புகார் செய்ததாக கூறினார்.

இது தொடர்பாக ஜாபர்கான்பேட்டையைச் சேர்ந்த அந்தோணி (வயது 39) என்பவரை போலீசார் கைது செய்தனர். இவர், உலக வங்கி அருகில் உள்ள சாப்ட்வேர் நிறுவனத்தில் பணியாற்றி வருவதும், பலரிடம் தான் உலக வங்கியில் வேலை செய்வதாகவும், அதே வங்கியில் வேலை வாங்கி தருவதாகவும் கூறி மோசடி செய்தது தெரிந்தது. பின்னர் அந்தோணியை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

1. மோசடி பணத்தை கொண்டு சென்ற 2 பேர் புதுக்கோட்டையில் சிக்கினர்
புதுக்கோட்டையில் பாதுகாப்பு அமைச்சகம் என காரில் போலி பலகை வைத்து மோசடி பணத்தை கொண்டு சென்ற 2 பேர் புதுக்கோட்டையில் கைது செய்யப்பட்டனர். அவர்களிடம் இருந்து ரூ.2½ லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது.
2. போலி நிறுவனங்கள் மூலம் ரூ.423 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி
போலி நிறுவனங்கள் மூலம் ரூ.423 கோடி ஜி.எஸ்.டி. வரி மோசடி 3 பேர் கைது.
3. வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி- ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு
வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் மோசடி செய்தவர் மீது நடவடிக்கை எடுக்கக்கோரி ஈரோடு மாவட்ட போலீஸ் சூப்பிரண்டிடம் புகார் மனு கொடுக்கப்பட்டது.
4. ரூ.2 லட்சம் மோசடி
ரூ.2 லட்சம் மோசடி
5. சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது
சென்னையில் பண இரட்டிப்பு மோசடி வழக்கில் தொழில் அதிபர் கைது.