மாவட்ட செய்திகள்

அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும்; விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும்; சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேச்சு + "||" + Aurangabad will be renamed; The BJP must abandon the idea of dividing Vidarbha; Uddhav Thackeray speech in the Assembly

அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும்; விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும்; சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேச்சு

அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும்; விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும்; சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேச்சு
அவுரங்காபாத் பெயர் மாற்றப்படும் என்றும், மராட்டியத்தில் இருந்து விதர்பாவை பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா கைவிட வேண்டும் என்றும் சட்டசபையில் உத்தவ் தாக்கரே பேசினார்.
பா.ஜனதா குற்றச்சாட்டு
சிவசேனா கட்சி காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைப்பதற்காக இந்துத்வா சித்தாந்தத்தை அடகு வைத்துவிட்டதாக பா.ஜனதா குற்றம் சாட்டி வருகிறது. இந்தநிலையில் நேற்று பட்ஜெட் கூட்டத்தொடரில் அவுரங்காபாத் பெயர் மாற்றத்திற்கு ஏற்படும் தாமதம் குறித்து பா.ஜனதா கேள்வி எழுப்பியது.

இதற்கு இந்துத்வா பற்றி நீங்கள் எனக்கு பாடம் எடுக்க வேண்டாம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே காட்டமாக பதிலளித்தார்.

இதுகுறித்து அவர் கூறியதாவது:-

சீனா ஊடுருவி இருக்காது
இந்துத்வா கொள்கை கொண்ட சாவர்கருக்கு பாரத ரத்னா விருது வழங்குமாறு கூறி 2 முறை அரசுக்கு கடிதம் எழுதினேன். இதுவரை கொடுக்கப்படவில்லை.நீங்கள் சாவர்கருக்கு பாரத ரத்னா வழங்காமல், அவுரங்காபாத் பெயர் மாற்ற விவகாரத்தில் எங்களுக்கு பாடம் எடுக்கிறீர்களா? அவுரங்காபாத்தின் பெயர் நிச்சயமாக மாற்றப்படும்.பா.ஜனதா ஆட்சியில் நாட்டின் எல்லையில் அமைக்கப்பட வேண்டிய முள்வேலி விவசாயிகளுக்கும் டெல்லிக்கும் இடையே அமைக்கப்படுகிறது. இதை எல்லையில் செய்திருந்தால் சீனா ஊடுருவியிருக்காது.

விலை இரட்டிப்பு
வாக்குறுதியளித்தபடி தங்களின் வருமானம் இரட்டிப்பாகும் என்று விவசாயிகள் காத்திருக்கிறார்கள். ஆனால் அதற்கு பதிலாக எரிபொருள் விலை இரட்டிப்பாகி உள்ளது.விதர்பாவை மராட்டியத்தில் இருந்து பிரிக்கும் எண்ணத்தை பா.ஜனதா விட்டுவிட வேண்டும். விதர்பாவை மராட்டியத்தில் இருந்து பிரிக்க நாங்கள் அனுமதிக்க மாட்டோம்.மறைந்த சிவசேனா தலைவர் பால் தாக்கரே வாழ்ந்த அறையில் கலந்துரையாடியபோது பா.ஜனதா தலைவர் அமித்ஷா, முதல்-மந்திரி பதவியை பகிர்ந்து கொள்வதாக அளித்த வாக்குறுதியை கடைப்பிடிக்கவில்லை.இதுதான் சிவசேனா தலைவர் பால் 
தாக்கரே மீதான உங்கள் அன்பா? நாங்கள் அதை ஒரு அறையாக கருதவில்லை, ஆனால் அது ஒரு கோவில்.

இவ்வாறு அவர் பேசினார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்திற்கு கூடுதலாக 1.5 கோடி டோஸ்கள் தேவை; பிரதமருக்கு, உத்தவ் தாக்கரே கடிதம்
நாட்டில் மராட்டிய மாநிலத்தில்தான் கொரோனா பாதிப்பு மிக மிக அதிகமாக உள்ளது.
2. மராட்டியத்தில் மீண்டும் முழு ஊரடங்கு அமலாகிறது; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தகவல்
மராட்டியத்தில் சில பகுதிகளில் மீண்டும் முழு ஊரடங்கு அமல்படுத்தப்படும் என்று முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே தெரிவித்தார். இந்தநிலையில் நாக்பூர் நகரில் 15-ந்தேதி முதல் பொதுமக்கள் வீட்டை விட்டு வெளியே வர தடை விதிக்கப்பட்டு உள்ளது.
3. ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும்: உத்தவ் தாக்கரே
ஊரடங்கை தவிர்க்க மக்கள் கண்டிப்பாக மாஸ்க் அணிய வேண்டும் என்று மராட்டிய முதல்வர் உத்தவ் தாக்கரே தெரிவித்துள்ளார்.
4. ராய்காட் போகர்பாடாவில், நவசேவா 3-வது கட்ட குடிநீர் திட்டம்; உத்தவ் தாக்கரே அடிக்கல் நாட்டினார்
ராய்காட்டில் உள்ள போகர்பாடாவில் நவசேவா குடிநீர் வினியோக 3-வது கட்ட திட்டத்துக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று முன்தினம் பன்வெலில் நடந்தது.
5. கொரோனா தடுப்பு மருந்து வந்தபோதும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்; முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே பேச்சு
கொரோனா தடுப்பு மருந்து வந்தபோதும் பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்க வேண்டும் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கூறியுள்ளார்.