கொரோனா தொற்று முற்றிலும் விலக வில்லை.பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்- கலெக்டர் எச்சரிக்கை


கொரோனா தொற்று முற்றிலும் விலக வில்லை.பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும்- கலெக்டர் எச்சரிக்கை
x
தினத்தந்தி 4 March 2021 5:33 PM GMT (Updated: 4 March 2021 5:33 PM GMT)

கொரோனா தொற்று முற்றிலும் விலக வில்லை. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்

ராமநாதபுரம்
கொரோனா தொற்று முற்றிலும் விலக வில்லை. பொதுமக்கள் அனைவரும் முக கவசம் அணிய வேண்டும் என கலெக்டர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கொரோனா
ராமநாதபுரம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் தடுப்பு நடவடிக்கைகள் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தொடர் தடுப்பு நடவடிக்கைகளின் காரணமாக மாவட்டத்தில் கொரோனா தொற்று குறைந்துள்ளது. பொது சுகாதாரத் துறையின் சார்பாக கொரோனா தடுப்பூசி செலுத்தும் பணிகளும் தற்போது துரிதமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. தற்போது 13 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 
எனினும் கொரோனா தொற்று முற்றிலும் ராமநாதபுரம் மாவட்டத்திலிருந்து விலகவில்லை. இதுவரை ராமநாதபுரம் மாவட்டத்தில் 137 பேர் கொரோனா தொற்றினால் உயிரிழந்துள்ளனர்.
முக கவசம்
இந்தநிலையில் பொதுமக்கள் அதிகம் கூடும் கடைவீதிகள், வாரச்சந்தைகள், வணிக நிறுவனங்கள், உணவகங்கள், வழிபாட்டுத்தலங்கள் மற்றும் பஸ் நிலையங்கள் ஆகியவற்றில் பொதுமக்கள் முக கவசம் அணியாமலும், சமூக இடைவெளி பின்பற்றாமல் இருக்கும் சூழ்நிலை நிலவுகிறது. இது மாவட்டத்தில் மீண்டும் கொரோனா தொற்று அதிகரிக்க வழிவகுக்கும். கொரோனா வைரஸ் பரவலை கட்டுப்படுத்துவதற்காக அரசு மேற்கொள்ளும் நடவடிக்கைகளுக்கு பொதுமக்கள் முழு ஒத்துழைப்பு வழங்க வேண்டும். 
வீட்டிலிருந்து வெளியே செல்லும் போது கட்டாயம் முக கவசம் அணிய வேண்டும். வர்த்தகர்கள் தங்கள் வணிக நிறுவனங்களுக்கு வரும் வாடிக்கையாளர்கள் சமூக இடைவெளிகளை கடைபிடித்தல், முக கவசம் அணிதல், சோப்பு கொண்டு கைகழுவுதல் அல்லது கிருமிநாசினியை பயன்படுத்துதலை உறுதி செய்ய வேண்டும் என்று ராமநாதபுரம் மாவட்ட கலெக்டர் தினேஷ் பொன்ராஜ் ஆலிவர் தெரிவித்துள்ளார்.

Next Story