அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது


அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது
x
தினத்தந்தி 4 March 2021 6:32 PM GMT (Updated: 4 March 2021 6:32 PM GMT)

அரசு பள்ளி ஆசிரியருக்கு விருது

ராமநாதபுரம்
பள்ளி மாணவர்களின் அறிவியல் சிந்தனையை ஊக்குவிக்கும் விதமாக சிறப்பாக செயல்படும் ஆசிரியர்களுக்கு மாநில அளவிலான சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது வழங்கும் திட்டத்தின் கீழ், பள்ளிக்கல்வித்துறை மூலம் அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளி ஆசிரியர்களில் மாநில அளவில் சிறந்த 10 ஆசிரியர்களுக்கு சிறந்த அறிவியல் ஆசிரியர் விருது மற்றும் ரொக்க பரிசு ரூ.25 ஆயிரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்த விருதுக்கு ராமநாதபுரம் மாவட்டம், அழகன்குளம் அரசு மேல்நிலைப்பள்ளி ஆசிரியர் வெங்கடேசன் தேர்வு செய்யப்பட்டுள்ளார். தமிழக அளவில் 10 ஆசிரியர்களில் கணித பிரிவில் முதல் ஆசிரியராக தேர்வு செய்யப்பட்டுள்ளார். இவர் நல்லாசிரியர் விருதினையும் பெற்றுள்ளார். விருது பெற்ற வெங்கடேசனை பள்ளி தலைமையாசிரியர் பெஞ்சமின், உதவி தலைமை ஆசிரியர் மகேந்திரன், ஆசிரியர்கள் பாராட்டினர்.

Next Story