அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு


அந்தியூர் அருகே குடிநீர் சீராக வினியோகிக்க கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்- போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 4 March 2021 9:31 PM GMT (Updated: 4 March 2021 9:31 PM GMT)

அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

அந்தியூர்
அந்தியூர் அருகே குடிநீர் வழங்கக்கோரி பெண்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.
சாலை மறியல்
அந்தியூர் அருகே வெள்ளித்திருப்பூர் ஊராட்சிக்கு உள்பட்டது பொரவிபாளையம். இந்த பகுதியை சேர்ந்த பெண்கள் ஏராளமானோர் நேற்று காைல 9 மணி அளவில் குருநாதசாமி கோவில் அருகே உள்ள அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் காலிக்குடங்களுடன் ஒன்று திரண்டனர். பின்னர் ரோட்டில் அமர்ந்து சாலை மறியலில் ஈடுபட்டனர்.
இதுபற்றிய தகவல் அறிந்ததும் வெள்ளித்திருப்பூர் போலீசார் மற்றும் கிராம நிர்வாக அலுவலர் பாபு, ஊராட்சி மன்ற தலைவர் ஈஸ்வரமூர்த்தி ஆகியோர் அங்கு சென்று பொதுமக்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினார்கள்.
குடிநீர் வினியோகிக்க கோரி...
அப்போது பொதுமக்கள் கூறும்போது, ‘அம்மாபேட்டை காவிரி ஆற்றில் இருந்து குழாய் மூலம் பொரவிபாளையத்தில் உள்ள மேல்நிலை குடிநீர் தொட்டிக்கு ஏற்றப்பட்டு தினமும் பொதுமக்களுக்கு குடிநீர் வினியோகிகப்பட்டு வந்தது. கடந்த 5 நாட்களாக எங்கள் பகுதிக்கு ஆற்று தண்ணீர் சீராக வினியோகம் செய்யப்படவில்லை. இதனால் நாங்கள் மிகவும் சிரமப்படுகிறோம். ஆழ்துளை கிணற்று தண்ணீரை எடுத்து பயன்படுத்தி வருகிறோம். எனவே ஆற்று தண்ணீரை வினியோகம் செய்ய அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும். இவ்வாறு பொதுமக்கள் கூறினார்கள்.
அதற்கு அதிகாரிகள், ‘ஒரு சில இடங்களில் குழாய்கள் உடைந்துள்ளதால் குடிநீர் சீராக வழங்க முடியவில்லை. உடனே அதனை சரிசெய்து குடிநீர் வழங்க நடவடிக்கை எடுக்கிறோம்’ என்றனர். அதை ஏற்றுக்கொண்ட பெண்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
இதனால் அந்தியூர்-வெள்ளித்திருப்பூர் ரோட்டில் சுமார் ½மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story