மாவட்ட செய்திகள்

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் 12 விமானங்கள் ரத்து + "||" + Flights canceled at Chennai airport due to low passenger numbers

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் 12 விமானங்கள் ரத்து

சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைவால் 12 விமானங்கள் ரத்து
சென்னை விமான நிலையத்தில் பயணிகள் எண்ணிக்கை குறைந்ததால் சென்னையில் இருந்து சென்று, திரும்பி வரவேண்டிய 12 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.

கட்டுப்பாடுகள் தளர்வு

கொரோனா ஊரடங்கு தளர்வுக்கு பிறகு சென்னை மீனம்பாக்கம் உள்நாட்டு விமான நிலையத்தில் விமான சேவைகளுக்கு விதிக்கப்பட்டு இருந்த கட்டுப்பாடுகள் முழுமையாக தளா்த்தப்பட்டு தற்போது முழு அளவில் விமான சேவைகளை நடத்த அரசு அனுமதி வழங்கி உள்ளது.

இதையடுத்து நாளொன்றுக்கு வருகை, புறப்பாடு விமானங்கள் 250-ல் இருந்து 260 வரை இயக்கப்பட்டு வந்தன. அதேபோல பயணிகள் எண்ணிக்கையும் 20 ஆயிரத்தில் இருந்து 30 ஆயிரம் வரை இருந்தது.

12 விமானங்கள் ரத்து

ஆனால் நேற்று பயணிகள் எண்ணிக்கை குறைந்துவிட்டது. சென்னையில் இருந்து புறப்பாடு, வருகை பயணிகள் சுமாா் 18,500 போ் மட்டுமே பயணித்தனர். அதேபோல் புறப்பாடு, வருகை விமானங்கள் என 231 விமானங்கள் மட்டுமே நேற்று இயக்கப்பட்டன.

இதற்கிடையே சென்னையில் இருந்து புறப்பட வேண்டிய விசாகப்பட்டினம், கொச்சி, பாட்னா, மும்பை, கவுகாத்தி ஆகிய 6 விமானங்கள் போதிய பயணிகள் இல்லாமல் ரத்து செய்யப்பட்டதாக தெரிவிக்கப்பட்டது.

அதைபோல் இந்த இடங்களில் இருந்து சென்னைக்கு திரும்பி வரவேண்டிய 6 விமானங்களும் ரத்து செய்யப்பட்டன. சென்னை விமான நிலையத்தில் நேற்று ஒரே நாளில் மட்டும் பயணிகள் இல்லாமல் 12 உள்நாட்டு விமானங்கள் ரத்து செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

 


தொடர்புடைய செய்திகள்

1. தடையை மீறி மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்கு வெளியே நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்
தடையை மீறி மாமல்லபுரத்தில் திரண்ட சுற்றுலா பயணிகள் கம்பி வேலிக்கு வெளியே நின்று புராதன சின்னங்களை பார்த்து ரசித்தனர்.
2. மாமல்லபுரத்தில் குவிந்த சுற்றுலா பயணிகள்
மாமல்லபுரத்தில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர்.
3. ரெயில் பயணத்தின்போது பயணிகள் கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் - தெற்கு ரெயில்வே வேண்டுகோள்
ரெயில் பயணத்தின்போது கொரோனா பாதுகாப்பு வழிமுறைகளை பின்பற்ற வேண்டும் என தெற்கு ரெயில்வே பயணிகளுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளது.
4. முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை
முத்துப்பேட்டை அலையாத்தி காட்டுக்கு சுற்றுலா பயணிகள் செல்ல தடை விதிக்கப்பட்டது.
5. சென்னை விமான நிலையத்தில் எந்திரக்கோளாறால் துபாய் விமானம் ரத்து; 182 பயணிகள் அவதி
சென்னை விமான நிலையத்தில் இருந்து துபாய் செல்ல வேண்டிய விமானம் எந்திரக்கோளாறு காரணமாக ரத்து செய்யப்பட்டது. இதனால் அதில் செல்ல இருந்த 182 பயணிகள் அவதி அடைந்தனர்.