மாவட்ட செய்திகள்

மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் பலி + "||" + Poultry shop employee killed by electricity

மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் பலி

மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் பலி
மின்சாரம் தாக்கி கோழி இறைச்சி கடை ஊழியர் இறந்தார்.

சென்னை கொருக்குப்பேட்டை அம்பேத்கர் நகர் 5-வது தெருவைச் சேர்ந்தவர் ஹயாத் பாஷா (வயது 42). இவர், கொருக்குப்பேட்டை கார்நேசன் நகர் காந்தி தெருவில் உள்ள கருணாகரன் என்பவருக்கு சொந்தமான கோழி இறைச்சி கடையில் வேலை செய்து வந்தார்.

நேற்று முன்தினம் இரவு கடையில் வியாபாரம் முடிந்ததும், கோழிகளை சுத்தம் செய்யும் எந்திரத்தை சுத்தம் செய்தார். அப்போது எதிர்பாராதவிதமாக மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்ட ஹயாத் பாஷா, அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

இதுபற்றி ஆர்.கே.நகர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

 


தொடர்புடைய செய்திகள்

1. ஊரப்பாக்கம் அருகே விபத்து: மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதல்; கல்லூரி பேராசிரியர் பலி
ஊரப்பாக்கம் அருகே மோட்டார் சைக்கிள் மீது லாரி மோதிய விபத்தில் பல்கலைக்கழக உதவி பேராசிரியர் பலியானார்.
2. முத்துப்பேட்டை அருகே மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி பலி
முத்துப்பேட்டை அருகே மகள் திருமணத்துக்கு நாள் குறிக்க சென்ற போது மின்கம்பத்தில் மோட்டார் சைக்கிள் மோதி விவசாயி உயிரிழந்தார்.
3. மத்திய பிரதேசத்தில் பரிதாபம் ஆக்சிஜன் பற்றாக்குறையால் 6 கொரோனா நோயாளிகள் பலி
மத்திய பிரதேச மாநிலத்தில் ஆக்சிஜன் பற்றாக்குறையால் கொரோனா நோயாளிகள் 6 பேர் பரிதாபமாக இறந்தனர்.
4. அமெரிக்காவில் விமான நிலையம் அருகே துப்பாக்கிச்சூடு; 8 பேர் சாவு; கொலையாளி துப்பாக்கியால் சுட்டு தற்கொலை
அமெரிக்காவில் இண்டியானா மாகாணத்தின் தலைநகர் இண்டியானாபோலிஸ் நகரில் உள்ள சர்வதேச விமான நிலையத்துக்கு அருகில் பெட்எக்ஸ் என்கிற பன்னாட்டு ‘லாஜிஸ்டிக்ஸ்’ நிறுவனம் உள்ளது.
5. ஈராக் ராணுவ தளம் மீது ராக்கெட் தாக்குதல்; துருக்கி வீரர் பலி
ஈராக் நாடடின் வடக்கு பகுதியில் உள்ள பாஷிகா பகுதியில் துருக்கி நாட்டின் ராணுவ தளம் செயல்பட்டு வருகிறது.