மாவட்ட செய்திகள்

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர்; போக்சோ சட்டத்தில் கைது + "||" + A Ghana singer who tricked little girls into marrying him by saying words of desire; Arrested under the Pokcho Act

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர்; போக்சோ சட்டத்தில் கைது

ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர்; போக்சோ சட்டத்தில் கைது
ஆசை வார்த்தைகள் கூறி சிறுமிகளை ஏமாற்றி திருமணம் செய்த கானா பாடகர் போக்சோ சட்டத்தில் கைது
சென்னை ஓட்டேரியை சேர்ந்த 18 வயது இளம்பெண், புளியந்தோப்பு அனைத்து மகளிர் போலீசில் அளித்துள்ள புகாரில் கூறி இருப்பதாவது:- செங்கல்பட்டு மாவட்டம் அச்சரப்பாக்கத்தைச் சேர்ந்த கானா பாடகர் திருமலை (வயது 22) என்பவருடன் 2 ஆண்டுகளுக்கு முன்பு செல்போன் மூலம் எனக்கு அறிமுகம் ஏற்பட்டது. அதன்பிறகு இருவரும் காதலித்து திருமணம் செய்து கொண்டோம். தற்போது எங்களுக்கு 4 மாத ஆண் குழந்தை உள்ளது. இதற்கிடையில் எனது கணவரும், அவரது குடும்பத்தினரும் என்னை வீட்டை விட்டு விரட்டிவிட்டு, அவருக்கு வேறு ஒரு திருமணம் செய்ய முடிவு செய்துள்ளனர். இதுகுறித்து நடவடிக்கை எடுக்க வேண்டும்.

இவ்வாறு அதில் கூறி இருந்தார்.

அதன்பேரில் நேற்று அச்சரப்பாக்கத்தில் இருந்த திருமலையை போலீசார் அழைத்து விசாரித்தனர். அதில் அவர், புளியந்தோப்பில் தங்கி இருந்தபோது பல சிறுமிகளுக்கு இதுபோல் போன் மூலம் குறுஞ்செய்தி அனுப்பி ஆசை வார்த்தைகள் கூறி திருமணம் செய்து ஏமாற்றியது தெரிந்தது.

இதற்கிடையில் அவர் ஏற்கனவே திருமணம் செய்து ஏமாற்றிய 2 சிறுமிகள் அவர் மீது புளியந்தோப்பு போலீசில் புகார் கொடுக்க வந்தனர். இதையடுத்து கானா பாடகர் திருமலையை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்து சிறையில் அடைத்தனர்.