3,700 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி


3,700 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி
x
தினத்தந்தி 5 March 2021 4:54 PM GMT (Updated: 5 March 2021 4:54 PM GMT)

மதுரை மாவட்டத்தில் இதுவரை 3,700 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.

மதுரை, 
மதுரை மாவட்டத்தில் இதுவரை 3,700 போலீசாருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
கொரோனா தடுப்பூசி
தமிழகம் முழுவதும் கொரோனா தடுப்பூசி போடும் பணி, கடந்த ஜனவரி மாதம் 16-ந்தேதி மதுரையில் தொடங்கியது. மதுரை மாவட்டத்தை பொறுத்தவரையில் தனியார், அரசு என 61 ஆஸ்பத்திரிகளில் கொரோனா தடுப்பூசி போடும் பணி நடைபெற்று வருகிறது. சுகாதாரப்பணியாளர்கள், முன்கள பணியாளர்களை தொடர்ந்து சட்டமன்ற தேர்தலில் ஈடுபட இருக்கும் பணியாளர்களுக்கு தடுப்பூசி செலுத்தும் பணி மும்முரமாக நடைபெற்று வருகிறது. 
இதுபோல், கடந்த 1-ந்தேதியில் இருந்து 60 வயதை கடந்தவர்களுக்கும், 45 முதல் 59 வயது வரை உள்ள இணை நோயாளிகளுக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டு வருகிறது.
நேற்றைய நிலவரப்படி, மதுரையில் இதுவரை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்களின் எண்ணிக்கை 34 ஆயிரத்து 138 ஆக உள்ளது. இவர்களில் 22 ஆயிரத்து 482 பேர் சுகாதாரப்பணியாளர்கள். 5 ஆயிரத்து 82 பேர் முன்கள பணியாளர்கள். 3,700 பேர் காவல் துறை சார்ந்த போலீசார். இதுபோல் ரெயில்வே போலீசார் 91 பேருக்கும், வருவாய்த்துறை சார்ந்த 32 பேருக்கும், சட்டமன்ற தேர்தலில் பணியாற்ற இருக்கும் 1,157 பேருக்கும் தடுப்பூசி போடப்பட்டுள்ளது.
பொதுமக்கள்
இதுதவிர, பொதுமக்களில் 6ஆயிரத்து 574 பேருக்கு கொரோனா தடுப்பூசி போடப்பட்டுஉள்ளது. அவர்களில் 4,810 பேர் 60 வயதை கடந்த முதியவர்கள். மீதம் உள்ள 1,764 பேர், இணை நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள். முதல்கட்டமாக தடுப்பூசி செலுத்தியதைபோல் இரண்டாம் கட்டமாகவும் மதுரையில் 4 ஆயிரத்து 736 பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டு உள்ளது என மதுரை மாவட்ட சுகாதாரத்துறை துணை இயக்குனர் அர்ஜூன்குமார் தெரிவித்துள்ளார்.

Next Story