வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம்


வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம்
x
தினத்தந்தி 5 March 2021 5:06 PM GMT (Updated: 5 March 2021 5:06 PM GMT)

கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு செயல் விளக்கம்

உடுமலை
கல்லூரி மாணவ, மாணவிகள் பலர் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட்டு, வருகிற சட்டமன்ற தேர்தலில் முதல் முறையாக வாக்களிக்க உள்ளனர்.அவ்வாறு முதல் முறையாக வாக்களிக்க உள்ள கல்லூரி மாணவ, மாணவிகளுக்கு மின்னணு வாக்குப்பதிவு எந்திரத்தில் வாக்களிப்பது எப்படி என்பது குறித்து மின்னணு வாக்குப்பதிவு எந்திரம், விவிபேட் ஆகியவற்றின் மூலம் செயல் விளக்கமளிக்கப்பட்டது. உடுமலை தாலூகா அலுவலக வளாகத்தில் நேற்று நடந்த இந்த நிகழ்ச்சியை தாசில்தார் வி.ராமலிங்கம் தொடங்கி வைத்தார். தேர்தல் துணை தாசில்தார் கிருஷ்ணவேணி, மண்டல துணை தாசில்தார் சந்திரசேகர், நில வருவாய் ஆய்வாளர் ரஞ்சித்குமார், அன்பு ஆகியோர் செயல்விளக்கமளித்தனர்.முன்னதாக வாக்களிப்பதன் அவசியம் குறித்து வாக்காளர் விழிப்புணர்வு ஊர்வலம் நடந்தது. உடுமலை தாலுகா அலுவலக வளாகத்தில் இருந்து புறப்பட்ட ஊர்வலம் கச்சேரி வீதி, தளி சாலை உள்ளிட்ட நகர முக்கிய வீதிகள் வழியாக சென்று தாலுகா அலுவலகத்தை வந்தடைந்தது. இதில் வருவாய்துறையினர் மற்றும் தனியார் கல்லூரி மாணவ, மாணவிகள் கலந்து கொண்டனர்.

Next Story