வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் தேரில் கலசம் வைத்து பூஜை


வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் தேரில் கலசம் வைத்து பூஜை
x
தினத்தந்தி 5 March 2021 5:16 PM GMT (Updated: 5 March 2021 5:16 PM GMT)

வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி தேதரில் கலசம் வைத்து பூஜை செய்யப்பட்டது. வருகிற 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.

வெள்ளகோவில்

வெள்ளகோவில் வீரகுமாரசாமி கோவில் தேர் திருவிழாவையொட்டி தேதரில் கலசம் வைத்து பூஜை செய்யப்பட்டது.  வருகிற 11-ந்தேதி தேரோட்டம் நடக்கிறது.
வீரக்குமாரசாமி கோவில்
 வெள்ளகோவிலில் உள்ள வீரக்குமாரசாமி கோவில் மிகவும் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இந்த கோவிலில் ஆண்டுதோறும் மாசி மகா சிவராத்திரியை முன்னிட்டு தேர்த்திருவிழா நடைபெறும். 
தேர்த்திருவிழாவையொட்டி 3 நாட்கள் தேரோட்டம் நடைபெறும். தற்போது கொரோனா வைரஸ் பரவல் இருப்பதால் தாராபுரம் சப்-கலெக்டர் பவன்குமார் 2 நாட்கள் மட்டும் தேரோட்டம் நடத்த அனுமதி வழங்கியுள்ளார். 
தேரில் கலசம்
அதையொட்டி இந்த ஆண்டு  மாசி மகா சிவராத்திரியையொட்டி கடந்த மாதம் 22-ந்தேதி தேர் முகூர்த்தக்கால் நடும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதையொட்டி நேற்றுகாலை தேரில் கலசம் வைத்து பூஜை செய்யப்பட்டது.  வருகின்ற 11-ந்தேதி பிற்பகல் 3 மணி அளவில் பள்ளய பூஜை, மாலை 4.30 மணி அளவில் சாமி ரதத்திற்கு எழுந்தருளச் செய்தல் நிகழ்ச்சியும், மாலை 5.30 மணிக்கு தேர் நிலை பெயர்த்தல் மற்றும் தேரோட்டமும் நடைபெறும்.மறுநாள் 12-ந்தேதி மாலை 4.30 மணிக்கு தேரோட்டம், தேர் நிலை தேர்தல், சுவாமி தேர்க்கால் பவனி தேவஸ்தான மண்டப கட்டளை நடைபெற உள்ளது.
மண்டப கட்டளைகள்
இந்த நிகழ்ச்சியில் நேற்று கோவில் அறங்காவலர் குழு தலைவர் எஸ்.என்.முத்துக்குமார், கோவில் முதன்மைதாரர்கள் நற்பணி மன்ற தலைவர் என்.டி.பாலசுப்பிரமணியன் மற்றும் அறங்காவலர்கள் வி.ஜி. ராமசாமி, ஜெ.சுந்தரவடிவேல், எஸ்.கே.குணசேகர்.கே.குமாரசாமி உள்பட கோவில் குலத்தவர்கள். கோவில் நிர்வாகிகள் கலந்து கொண்டனர். 
வருகிற 13-ந்தேதி முதல் 25-ந்தேதி வரை கோவில் குலத்தவர்களின் மண்டப கட்டளைகள் நடைபெற உள்ளது. இதற்கான ஏற்பாடுகளை கோவில் குலத்தவர்களும், கோவில் நிர்வாகத்தினரும் செய்து வருகின்றனர்.

Next Story