உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்


உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்
x
தினத்தந்தி 5 March 2021 6:42 PM GMT (Updated: 5 March 2021 6:42 PM GMT)

உள் இடஒதுக்கீட்டை ரத்து செய்யக்கோரி ஆர்ப்பாட்டம்

ராமநாதபுரம்
வன்னியர்களுக்கு அரசு வழங்கியுள்ள 10.5 சதவீத உள் இட ஒதுக்கீட்டை ரத்து செய்ய வேண்டும், சீர்மரபினர் சமுதாயத்திற்கு வழங்கப்படும் 2 சான்றிதழுக்கு பதிலாக டி.என்.டி என்ற ஒற்றை சான்றிதழ் வழங்க வேண்டும் என்பது போன்ற கோரிக்கைகளை வலியுறுத்தி ராமநாதபுரம் கலெக்டர் அலுவலக வளாகத்தில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பு சார்பில் கருப்புக்கொடி ஏந்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. நிகழ்ச்சியில் அனைத்து மறவர் நல கூட்டமைப்பின் ஆலோசகர் விஜயகுமார், வன்னியர்களுக்கு வழங்கப்பட்ட இடஒதுக்கீட்டை எதிர்த்து ஐகோர்ட்டில் வழக்கு தொடர உள்ளதாக தெரிவித்தார். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள் கருப்புக்கொடி ஏந்தி கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷமிட்டனர். நிகழ்ச்சியில், தலைவர் சண்முகசாமி, துணை தலைவர் மயில்மணி பாண்டியன் உள்பட பலர் கலந்து கொண்டனர். தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமலில் உள்ள நிலையில் உரிய அனுமதியின்றி நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தினை பறக்கும்படை அதிகாரிகள் வீடியோ பதிவு செய்ததுடன் வழக்குபதிவு செய்ய உள்ளதாக கூறப்பட்டது.

Next Story