உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வசூல்


உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வசூல்
x
தினத்தந்தி 5 March 2021 7:04 PM GMT (Updated: 5 March 2021 7:04 PM GMT)

உண்டியல் காணிக்கை மூலம் ரூ.4½ லட்சம் வசூல்

பொன்னமராவதி
பொன்னமராவதி அருகே உள்ள கொன்னையூர் முத்துமாரியம்மன் கோவில் பிரசித்தி பெற்ற கோவிலாகும். இங்கு ஆண்டுதோறும் பங்குனி திருவிழா நடைபெறும். அதேபோல இந்த ஆண்டு வருகிற 14-ந் தேதி திருவிழா தொடங்குகிறது. திருவிழாவிற்கு முன்பாக கோவில் உண்டியலில் பக்தர்கள் செலுத்திய காணிக்கை பொருட்கள் எண்ணப்படுவது வழக்கம். அதன்படி, நேற்று கோவில் உண்டியல் திறக்கப்பட்டு காணிக்கை எண்ணும் பணி நடைபெற்றது. புதுக்கோட்டை உதவி ஆணையர் சுரேஷ், கோவில் செயல் அலுவலர் வைரவன், ஆய்வாளர் ராமகிருஷ்ணன் ஆகியோர் முன்னிலையில் கோவில் பணியாளர்கள், பள்ளி மாணவர்கள், வங்கி ஊழியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் காணிக்கை பொருட்களை எண்ணினர். இதன்முடிவில் கோவில் உண்டியல்கள் மூலம் ரூ.4 லட்சத்து 63 ஆயிரத்து 743 மற்றும் தங்கம் 32 கிராம், வெள்ளி 87 கிராம் வசூலானதாக தெரிவிக்கப்பட்டது.

Next Story