மாவட்ட செய்திகள்

தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் + "||" + Devendra Kula People's Movement Struggle

தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்

தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம்
நெல்லையில் தேவேந்திர குல மக்கள் இயக்கத்தினர் போராட்டம் நடத்தினர்.
நெல்லை, மார்ச்:
தேவேந்திர குல மக்கள் இயக்கத்தை சேர்ந்தவர்கள் மாநில அமைப்பு செயலாளர் ஜெயக்குமார் தலைமையில், நெல்லை மாவட்ட கலெக்டர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். பின்னர் அவர்கள், கலெக்டர் விஷ்ணுவை சந்தித்து மனு கொடுத்தனர்.
அந்த மனுவில், ‘எங்கள் இயக்கத்தின் நிறுவன தலைவர் குமுளி ராஜ்குமார் மற்றும் அருண், வினோத் பாண்டியன் ஆகியோரை தச்சநல்லூர் போலீசார் கைது செய்துள்ளனர். அவர்கள் மீது பொய் வழக்கு போடப்பட்டுள்ளது. குமுளி ராஜ்குமார் நெல்லை அரசு ஆஸ்பத்திரியில் சிகிச்சை பெற்று வந்தபோது அவசர அவசரமாக கைது செய்துள்ளனர். இதற்கு காரணமான போலீஸ் அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். குமுளி ராஜ்குமார் மீது போடப்பட்ட வழக்குகளை ரத்து செய்ய வேண்டும்’ என்று கூறப்பட்டு இருந்தது.

தொடர்புடைய செய்திகள்

1. கோபி அருகே ரோட்டின் குறுக்கே குழாய்களை போட்டு பொதுமக்கள் போராட்டம்
கோபி அருகே ரோட்டின் குறுக்கே குழாய்களை போட்டு பொதுமக்கள் போராட்டம் நடத்தினார்கள்.
2. பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகை
பழைய ஜெயங்கொண்டத்தில் குடிநீர் கேட்டு பேரூராட்சி அலுவலகத்தை பொதுமக்கள் முற்றுகையிட்டனர். இதையடுத்து அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தினர்.
3. ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டம்
ஈரோடு கருங்கல்பாளையம் பகுதியில் சாக்கடை கால்வாயை சுத்தம் செய்யக்கோரி பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
4. கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டம்
கோவில்களில் திருவிழா நடத்த அனுமதி கோரி நெல்லையில் நாட்டுப்புற கலைஞர்கள் மேளதாளம் முழங்க போராட்டத்தில் ஈடுபட்டனர்.
5. தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் கோவில் விழாக்களை நடத்த கோரிக்கை
தென்காசியில் நாட்டுப்புற கலைஞர்கள் போராட்டம் நடத்தினார்கள்.

அதிகம் வாசிக்கப்பட்டவை