திம்பம் மலைப்பாதையில் தடையை மீறி இயங்கிய 14 சக்கர லாரி பறிமுதல்


திம்பம் மலைப்பாதையில் தடையை மீறி இயங்கிய 14 சக்கர லாரி பறிமுதல்
x
தினத்தந்தி 5 March 2021 9:48 PM GMT (Updated: 5 March 2021 9:48 PM GMT)

திம்பம் மலைப்பாதையில் தடையை மீறி இயங்கிய 14 சக்கர லாரி பறிமுதல் செய்யப்பட்டது.

தாளவாடி
ராஜஸ்தானில் இருந்து மின்சாதனப்பொருட்கள் ஏற்றிய 14 சக்கரம் கொண்ட சரக்கு லாரி தாளவாடி அருகே திம்பம் மலைப்பாதை நேற்று சென்று கொண்டிருந்தது. 9-வது கொண்டை ஊசி வளைவில் திரும்பும்போது லாரி பழுதாகி நின்றது. இதனால் தமிழகம்-கர்நாடகம் இடையே 4 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இதுபற்றி அறிந்ததும் நெடுஞ்சாலை போலீசார் அங்கு சென்று பழுதான லாரியை ஆய்வு செய்தபோது அது திம்பம் மலைப்பாதை வழியாக வருவதற்கு தடை செய்யப்பட்ட 14 சக்கர லாரி என்பது தெரியவந்தது.
12 சக்கரம் கொண்ட லாரிகள் மட்டுமே திம்பம் மலைப்பாதையில் அனுமதிக்கப்பட்ட நிலையில் தடையை மீறி இயங்கிய ராஜஸ்தான் மின்சாதன லாரியை பண்ணாரி சோதனைச்சாவடி வட்டார போக்குவரத்து அலுவலர் பறிமுதல் செய்தார். அதேபோல் திம்பம் மலைப்பாதை 26-வது கொண்டை ஊசி வளைவில் அதிக பாரம் ஏற்றி வந்த பழுதான கர்நாடக மாநில லாரிக்கு நெடுஞ்சாலை துறை போலீசார் ரூ.6 ஆயிரத்து 200 அபராதம் விதித்தனர்.

Next Story