மாவட்ட செய்திகள்

32 பதற்றமான வாக்குச்சாவடிகள் + "||" + Polling stations

32 பதற்றமான வாக்குச்சாவடிகள்

32 பதற்றமான வாக்குச்சாவடிகள்
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாக சப்-கலெக்டர் தினேஷ்குமார் கூறினார்.
சிவகாசி, 
சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 32 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளதாக சப்-கலெக்டர் தினேஷ்குமார் கூறினார். 
வாக்காளர் பட்டியல் 
இதுகுறித்து சிவகாசி சட்டமன்ற தொகுதி தேர்தல் நடத்தும் அலுவலரும், சப்-கலெக்டருமான தினேஷ்குமார் நிருபர்களிடம் கூறியதாவது:-
சிவகாசி சட்டமன்ற தொகுதிக்கு உட்பட்ட பகுதியில் தற்போதைய நிலவரப்படி 2 லட்சத்து 60 ஆயிரத்து 941 வாக்காளர்கள் உள்ளனர். தற்போது வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க கொடுக்கப்பட்ட விண்ணப்பங்கள் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மூலம் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு வருகிறது. 
விண்ணப்பம் 
வருகிற 20-ந் தேதி வரை வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விண்ணப்பம் வழங்கலாம். 
அதில் தகுதியானவர்கள் பெயர்களை வாக்காளர் பட்டியலில் சேர்க்க உரிய நடவடிக்கை எடுக்கப்படும். சிவகாசி தொகுதியில் தற்போது 368 வாக்குசாவடிகள் அமைக்கப்பட்டுள்ளன. இதில் ஆண்கள் மட்டும் வாக்களிக்க 91 வாக்குசாவடிகளும், பெண்கள் மட்டும் வாக்களிக்க 91 வாக்குசாவடிகளும், இரு பாலரும் வாக்களிக்க 186 வாக்குசாவடிகளும் அமைக்கப்பட்டுள்ளன.
கண்காணிப்பு 
 இதில் சித்துராஜபுரம், நடுவபட்டி, வடபட்டி, விஸ்வநத்தம் உள்ளிட்ட 32 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை. 
இந்த 32 வாக்குச்சாவடிகளில் கூடுதல் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டு கண்காணிக்கப்படும். அதேபோல் கடந்த தேர்தலின் போது 90 சதவீதம் வாக்குபதிவான வாக்குச்சாவடிகளிலும், ஒரே வேட்பாளருக்கு 75 சதவீதம் வாக்கு அளிக்கப்பட்ட வாக்குச்சாவடிகளிலும் கூர் நோக்கி கண்காணிக்கப்படும். 
நீக்கம் 
மேலும் சிவகாசி சட்டமன்ற தொகுதியில் இறந்த 1,300 பெயர்களை உறவினர்களின் அனுமதியுடன் வாக்காளர்பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளது. இவ்வாறு அவர் கூறினார். 
பேட்டியின் போது சப்-கலெக்டரின் நேர் முக உதவியாளர் சீனிவாசன் உடனிருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. பெரம்பலூர்- அரியலூர் மாவட்டங்களில் 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார்
சட்டமன்ற தேர்தலுக்கான ஓட்டுப்பதிவு நாளை நடைபெறவுள்ளதையொட்டி பெரம்பலூர்-அரியலூர் மாவட்டங்களில் வாக்காளர்கள் வாக்களிக்க வசதியாக 1,569 வாக்குச்சாவடி மையங்கள் தயார் நிலையில் உள்ளன.
2. கரூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே பேட்டி
கரூர் மாவட்டத்தில் 123 பதற்றமான வாக்குச்சாவடிகள் உள்ளது. மேலும் கரூர் உள்பட 4 சட்டமன்ற தொகுதிகளிலும் நியாயமான முறையில் தேர்தல் நடத்தப்படும் என மாவட்ட கலெக்டர் பிரசாந்த் மு.வடநேரே கூறினார்.
3. தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளில் கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு
தூத்துக்குடியில் வாக்குச்சாவடிகளில் மாவட்ட கலெக்டர் செந்தில்ராஜ் ஆய்வு மேற்கொண்டார்.
4. 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை
அருப்புக்கோட்டை சட்டமன்ற தொகுதியில் 19 வாக்குச்சாவடிகள் பதற்றமானவை என தேர்தல் உதவி அதிகாரி ரவிச்சந்திரன் கூறினார்.
5. திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 86 வாக்குச்சாவடிகள்
திருவாடானை சட்டமன்ற தொகுதியில் கூடுதலாக 86 வாக்குச்சாவடிகள்